பக்கம்:இல்லற நெறி.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

இல்லற நெறி


புணர்ச்சியின் பொழுது வெளிப்பகுதியில் சிந்தும் விந்துப் பாய்மம் கருப்பையினுள் செல்லாமல் தடை செய்யப்பெறு கின்றது. இதல்ை விந்தணு முட்டையணுவை அணுக இய லாததால் கருவுறல் தவிர்க்கப்பெறுகின்றது. பெரும்பாலும் இவ்வுறை கருத்தடைப் பசையுடன்தான் பயன்படுத்தப் பெறும். இதல்ை வழுவழுப்புத் தன்மை ஏற்படுவதுடன் கருத்தடை முறையும் உறுதியாக அமைந்து விடுகின்றது.

மருத்துவர் சோதனை செய்து உறையைத் தேர்ந்தெடுத்த பின்னர், உறையை அணிந்துகொள்வதையும், அகற்றுவதை யும் ஒரு பெண் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம். உறையை அணிவதற்கு முன்னர் அரை தேக்காண்டி அளவு கருத் தடைப் பாகுப்பொருளை அல்லது பசையை எடுத்து உறை யின் உட்புறம், வெளிப்புறம், விளிம்பு ஆகிய எல்லாப் பாகங்களிலும் நன்கு தடவவேண்டும் இவ்வாறு செய்வ தால் உறையைச் செருகுவது எளிதாக இருப்பதுடன் வேதி யியல் முறையில் பாதுகாப்பும் ஏற்படுகின்றது. அதன் பிறகு உறை யோனிக் குழலினுள் செருகப்பெறுகின்றது. இவ் வாறு செய்வதில் விரல்களையே பயன்படுத்திக் கொள்ளலாம்; அல்லது பிரத்தியோகமாகச் செய்யப்பெற்ற செருகு கருவி வினை வேண்டுமானலும் பயன்படுத்தலாம். உறையைச் சரியாக அணிந்து கொண்ட பின்னர் அது யோனிக் குழலின் குறுக்கே ஒர் இரப்பர்த் திரைபோல் பொருந்திக் கருப்பை யின் வாயினையும் அதிலுள்ள துளையினையும் நன்ருக மூடிக் கொண்டுள்ளதா என்பதை விரலால் தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ளலாம்.

சாதாரணமாக உறையைப் படுக்கப்போவதற்கு முன்ன தாகவோ, அன்றி புணர்ச்சிக்குச் சற்று முன்னதாகவோ அணிந்துகொள்ளலாம், புணர்ச்சிக்குப்பின்னர் உறை எவ்வ ளவு நேரம் அப்படியே இருக்கலாம் என்பது உறையை அணிந்துகொண்டிருக்கும் பெண்ணின் செளகர்யத்தைப்

71. Q&@@5 &Q563–1 nserter

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/290&oldid=1285219" இலிருந்து மீள்விக்கப்பட்டது