உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இல்லற நெறி


கூட-ஆடவனின் பொருளீட்டும் திறனே அவனத் திருமணத் திற்குப் பொருத்தமானவளுகச் செய்கின்றது. இன்று பெண் வீட்டார் "மாப்பிள்ளை என்ன செய்கின்ருர்? என்ன படித்தி ருக்கின்ருர்? என்ற வினுக்களையே முதலில் விடுக்கின்றதை நீ கேட்டிருப்பாய். கல்வியையும் பொளிட்டும் திறனுகக் கருது கின்றனர். மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலத் திலும் ஆடவன் ஒரு மகளின் உள்ளத்தைக் கவர வேண்டு மாயின் தன் உடல் திறனையும் துணிவையும் காட்டி வேண்டி யிருந்தது. படித்த சமூகத்தினர் இன்று ஆடவனின் பொரு ளிட்டும் திறனையே வற்புறுத்துகின்றனர். சில சமூகத்தினர் இரு பாலாரின் பொருளிட்டுந் திறனையும் கணக்கிற்கு எடுத் துக் கொள்ளுகின்றனர். எனினும், ஆடவனின் திறனுக்கே முதலிடம் அளிக்கப்பெறுகின்றது.

கல்வி பெறவேண்டிய அளவு பெற்று ஒரு வேலையில் அமர்ந்த பிறகுதான் திருமணம் புரிந்துக் கொள்ளவேண்டும் என்று நீ எண்ணுகின்ற எண்ணம் சரியே. இதுவே சிறந்த குறிக்கோள். தமிழ் இலக்கணங்களில் களவு நிகழ்ந்த பிறகு பொருள்வயிற் பிரிதல்' என்ற துறை அமைக்கப்பட் டிருப்பதை எண்ணி ஒர்க. மனிதன் தானே தனது தாளாண் மையினல் திரட்டும் செல்வமே அனைத்திலும் சிறந்தது என்று பண்டையோர் விதித்திருக்கும்பெருமையினே எண்ணிப்பெரு மிதம் கொள்க. ஒர் ஆடவன் வேட்டையாடுதலில் தன் திறனைக் காட்டித் தன் துணைவியையும் மக்களேயும் காப்ப துடன் தன் மனைவியின் பெற்ருேர்களேயும் காத்து ஆதரவு அளிக்க முடியும் என்று மெய்ப்பித்த பிறகே அவன் ஒருத்தி யைத் தன் மனைவியாகக் கொள்ளும் உரிமையைப் பெற முடியும் என்ற வழக்கம் சில எஸ்கிமோ சமுகத்தினரிடையே இருந்ததாக எட்வர்ட் வெஸ்ட் மார்க் என்ற அறிஞர் குறிப் பிட்டுள்ளார். ஆயின், இன்று பெண்ணைப் பெற்ருேர் அத் தகைய துணிவினைத் தமக்கு மருமகனக வரும் ஆடவனிட

11. The History of Human Marriage (Mac Millan

Company:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/30&oldid=1285090" இலிருந்து மீள்விக்கப்பட்டது