உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

இல்லற நெறி


என்பது பொதுவாக எல்லோரும் அறிந்த செய்தி: ஒரு பெண் பூப்பெய்தியதிலிருந்து அவள் கருத்தரிக்கும் ஆற்றல் யும் அடைகின்றுள் என்பது பொதுக் கருத்தாக இருப் பினும், பூப்பின் தொடக்கம் குழந்தைப் பேற்றினுக்கும் அறிகுறியாகும் என்று சொல்லுவதற்கில்லை: பூப்பு எய்திய பிறகு சில காலம் வரையிலும் முட்டை பக்குவமடைதல் தொடங்காமலிருத்தலும் கூடும். பூப்பின் தொடக்கத்திற் கும் கருவுற்று இனப் பெருக்கம் செய்யும் பருவத்திற்கும் இடையிலுள்ள காலம் குமரப் பருவ மலடு' என்று வழங்கப் பெறும். இப்பருவம் கில மாதங்களிலிருந்து ஈராண்டுகள் வரையிலும் நீடிக்கும். இக்காலத்தில் கருத்தரித்தல் முடி யாது என்பது அல்ல; இது பெரும்பாலும் நேரிடாது என் பதே கருத்து.

சாதாரணமாகப் பென்கள் பன்னிரண்டு வயதிலிருந்து பதினைந்து வயதிற்குள் உள்ள காலத்தில் குழந்தைப் பேற் நின அடைகின்றனர். பத்து, ஒன்பது, ஆறு வயதிலும் மகளிர் குழந்தைப் பேற்றினை அடைந்ததாக மருத்துவ இலக்கியத்தில் கூறப்பெற்றுள்ளது. 1939-ஆம் யான்டில் தென் அமெரிக்காவைச் சேர்ந்த பெரு" என்ற நாட்டில் ஐந்தரையாண்டு நிரம்பிய ஒர் இந்தியப் பெண் செசேரியன் அறுவை முறை மூலம் ஒரு குழந்தையைப் பெற்ருள் என்று அறிவிக்கப் பெற்றுள்ளது! இவை யாவும் அரிதான செயலே பன்றி, அன்ரு டச் செயலன்று, கன்னிப் பெண்ணுக (மிகச் சிறிய பெண்ணுக) இருந்த காலத்திலேயே குந்தி சூரியன் அருளால் ஒரு பிள்ளையைப் பெற்ருள் என்பதும், இச்செய லேப் பலரும் அறியாதிருக்க அப்பிள்ளையைப் பேழையில் வைத்து ஆற்றில் விட்டாள் என்பதும், அப்பிள்ளேயே பின் னர் அங்கர் கோணுகிய கர்ணன் என்பதும் பாரதக் கதை தமக்கு எடுத்துரைக்கின்றது: .

ஒரு பெண் சூதக ஒய்வை எய்தியதும் கருத்தரிக்கும் செயல் அவளிடம் நின்று போகின்றது. சூதக ஒய்வு அடை யும் காலம் பெண்ணுக்குப் பெண் மாறுகின்றது. அங்ானமே,

8: Guarú i JG5ai 1030$-Adolescent sterility.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/306&oldid=1285226" இலிருந்து மீள்விக்கப்பட்டது