உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பேறு 303

தாது உட்பட வேண்டும் என்றும் அநுபவத்தால் அறியக் கிடக்கின்றது

சூதக ஒய்வுக் காலத்தில்-வாழ்க்கையின் மாற்றப்" பருவத்தில்-பெரும்பாலும் கருத்தரிப்பு ஏற்படுவதில்லை என்ருலும், அது சாத்தியமில்லை என்று சொல்ல முடியாது. ஆகவே, பெரும்பாலான பெண்கள் இப்பருவத்தில் தம்மிடம் மாதவிடாய் ஒழுங்கற்ற முறையில் எற்பட்டால், மாத விடாய் ஒழுக்கு நிற்றல் சூதக ஒய்வு மாற்றங்களா, அன்றிக் கருவுற்றதன் அறிகுறியா என்பதை அறிந்து கொள்வதில் கவலை கொள்ளுகின்றனர். அடிக்கடி நேரிடும் இத்தகைய ஐயங்களைத் தவிர்க்கவேண்டுமாயின், சூதக ஒய்வு நன்ருக ஏற்படும் வரையில் இம்மாற்றம் நிகழுங்கால் கருத்தடை முறைகளை மேற்கொள்வது நன்று. ஒராண்டுவரை மாத விடாய் இல்லாது நிற்கும் வரையில் ஒரு பெண் தனக்குக் குழந்தைப்பேறு ஏற்படாது என்று கருதுதல் கூடாது.

ஆணின் கருவுறச்செய்யும் திறன் : இனி, ஆணின் கரு வுறச்செய்யும் திறனைப்பற்றியும்க் சிறிது விளக்குவேன்: ஒவ்வொரு சிறுவனும் தான் விரகறியும் பருவத்தைகி எய் துங்கால் முதலில் கருவுறச் செய்யும் ஆற்றலைப் பெறுகின் முன். சாதாரணமாக இப்பருவம் பதின்மூன்று வயதிலிருந்து பதினறு வயதிற்குள்ள காலமாகும். இந்தக் காலத்தில்தான் விந்தணுக்கள் விரைசளில் உணடாகத் தொடங்குகின்றன; இப்பொழுது இவரிைடம் வெளிப்படக்கூடிய விந்து கருப் பத்தை உண்டாக்குதல் கூடும். எனினும், பெண்ணைவிட இவனிடம் கருவுறச் செய்யும் திறன் மிக அதிகமான காலம் வரை நீடிக்கின்றது. அறுபது அல்லது எழுபது வயதுவரை ஆண்கள் தந்தையர்களாவதை நாம் அடிக்கடிக் காணுமல் இல்லை. மருத்துவ இலக்கியத்தில் 97 வயது நிறைந்த ஒருவர் தந்தையான செய்தி காணப்பெறுகின்றது. ஆயினும், ஆண்


-

I 1. கருவிநக் செய்யும் goos-Fertility. 12; விரகறியும் பருவம்-Puberty;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/309&oldid=598223" இலிருந்து மீள்விக்கப்பட்டது