பக்கம்:இல்லற நெறி.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336

இல்லற நெறி


குக் கருப்பிண்டம் வெளிவந்துவிடவே, வேதவியாசர் அதனை நூறு கூறிட்டு நூறு மொந்தை சளில் வைத்து உரு வேற்றியதனுல் நூற்றுவர் பிறந்தனர் என்று பாரதக் கதை யில்ை அறிகின்றுே மல்ருே? இவை யாவும் எதிர்காலத்தில் ஆய்வகத்தில் இனப் பெருக்கம் செய்யப்பெறலாம் என்ப தற்கு அறிகுறிகளாக அமைகின்றன அல்லவா? இத்தகைய கற்பனே ஒவியங்களை அறிவியலறிஞர்களும் தீட்டியுள்ளனர். ஹால்டேன்' என்ற பிரிட்டிஷ் அறிவியலறிஞர் "எதிர்கால அறிவியல்” என்னும் தமது நூலில் பெரும்பாலான மானி டக் குழவிகள் ஆய்வகத்தில் பிறத்தல்கூடும் என்று சோதிடம் கூறியுள்ளார். பூப்பு எய்தும் பருவத்தில் ஒரு பெண்ணின் சூற்பை அகற்றப்பெற்று ஒரு தக்க ஊடகத்தில் வைக்கப்பெலும், திங்கள்தோறும் முதிர்ச்சி படையும் முட்டையணு விந்தனுக்களைக் கொண்டு செயற்கை முறை யில் கருவுறச் செய்யப்பெறும். இவ்வாறு கருவுற்ற முட்டை கள் ஆய்வகத்தில் ஒன்பது திங்கள் அடைகாக்கப் பெற்றுக் குழந்தைகளாக்கப்பெறும். இன மேம்பாட்டியல்படி உயர்த்த வகை ஆண்- பெண் பால்- அணுக்களே தேர்ந் தெடுக்கப்பெற்று இனம் பெருக்கப்பெறும். - -

மானிட விந்துவைக் கண்ணுடிக் குழல்களில் வைத்து உடனே உறையச் செய்தால் வீந்தணுக்கள் நீண்ட காலத் திற்குத் தம்முடைய உயிர்ச் சக்தியை இழப்பதில்லை என் பதை ஏற்கெனவே உனக்குத் தெரிவித்துள்ளேன். எழுபது நாட்கள் வரையிலும் உறை நிலையிலேயே இருந்து அதன் பிறகு உருகுநிலக்கு வருங்கால் பெரும்பாலான விந்தணுக் கள் இயக்கநிலையைப் பெறுகின்றன. மேம்பாடடைந்த பல யுக்தி முறைகளைக் கையாண்டு எவ்வளவு காலம் வேண்டுமா யினும் வித்தனுக்களை உறங்குநிலையில்" வைத்திருக்கலாம். இத்தகைய சாத்தியக் கூறுகள் மானிடக் கருத்தரிப்புபற்றிய துறையில் புதிய உயிரியல் ஆராய்ச்சிக் காட்சிகளை நமக்குத் திறந்துகாட்டத் துணையாகவுள்ளன: 64. Aspréða-o-Haldane. 68. o.psis go-Dormant state.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/342&oldid=1285243" இலிருந்து மீள்விக்கப்பட்டது