உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பேறு $41

இளஞ்சூல் வெளிப்பட்டால் எதிர்காலத்தில் ஒவ்வொரு கருப்பத்தின்பொழுதும் அவளிடம் அங்ங்ணம் நிகழும் என்று சொல்வத கில்லை. முதல் கருப்ப காலத்தில் தோன்றிய சூல் வெளிப்படுவதற்குரிய கூறுகள் ஒவ்வெரு கருப்பக் காலத்தி லும் தோன்றுவதில்லை. ஒரு சில பெண்களிடம் பழக்கமாகச் சூல் வெளிப்படுவதற்குரிய அறிகுறிகள் தோன்றுகின்றன. ஆகவே, ஒரு பெண்ணிடம் இத்தகைய நிகழ்ச்சி ஒரு தடவை நிகழ்ந்தால், அவள் அடுத்த கருப்பம் ஏற்படுவதற்கு முன்னர் உடலை நன்கு சோதித்துக்கொள்ளல்வேண்டும். அன்றியும், கரு நன்கு முதிர்ச்சி பெறும் காலம் முழுவதும் அவள் தக்க மருத்துவரின் மேற்பார்வையில் இருத்தல்வேண்டும். இந்த முறையைக் கையாண்டால் சூல் வெளிப்படுவதைக் தடுக் கும் அல்லது திருத்தும் ஏற்பாடுகளைத் தக்க காலத்தில் எடுத் துக்கொள்ள வசதிகள் ஏற்படும். நல்ல உணவு கொள்ளல், பிரத்தியேகமான விட்டமின்களையும் ஹார்மோன்களையும் உட்கொள்ளல், கருப்பையின் இடப்பெயர்ச்சிகளைச் சரி செய்து கொள்ளல் போன்ற மருத்துவ முறைகளை முன் கூட்டியே மேற்கொண்டால் அடுத்து ஒரு முறை இளஞ்சூல் வெளிப்படுவது நேரிடாமல் தடுத்துவிடலாம்:

கருப்ப காலத்தில் தற்செயலாகக் கருப்பிணிக்கு ஒரு சிறிய அதிர்ச்சி ஏற்பட்டாலும், கருப்பிண்டம் வெளிப்படு வதற்குக் காரணமாகிவிடும் என்ற அச்சம் பலரிடம் இருந்து வருகின்றது. ஒரு சிறிய உடல் அதிர்ச்சி அல்லது உள்ளக் கிளர்ச்சியதிர்ச்சி ஏற்பட்டாலும் ஒரு சில பெண்கள் துன் னிய உணர்வுடையவர்களாதலின் அவர்களிடம் இளஞ்சூல் வெளிப்படுகின்றது என்பது உண்மைதான். ஆனல், கடுமை யான உடற்பயிற்சியும் மட்டு மீறிய உழைப்பும்கூட சாதா ரணமாகக் கருப்பத்தைப் பாதிக்காது என்பதை நினைவில் வைக்கவேண்டும்;

இறந்து பிறத்தல்: சிலரிடம் குழந்தை இறந்தே பிறக் கின்றது . இவ்வாறு பிறத்தல் இரண்டு அல்லது மூன்று சத

T75. குழந்தை இறந்து பிறத்தல்-Still birth

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/347&oldid=598305" இலிருந்து மீள்விக்கப்பட்டது