பக்கம்:இல்லற நெறி.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண்க்கலை 8ፅ?

கலவிக்குமுன் கணவனின் செயல்கள்: புணர்ச்சியைமுத் றிலும் கொண்டுசெலுத்துவதற்கு முன்னர் கணவன் மனைவி யைப் படிப்படியாகத் தன் நம்பிக்கைக்குப் பாத்திரமுள்ள வளாகச் செய்வதற்குக் குறைந்தது பத்து நாட்களாவது எடுத்துக்கொள்ளவேண்டும் என்று வாத்ஸ்யாயனர் தனது காம சூத்திரத்தில் கூறுவது தற்காலத் தம்பதிகட்குப் பொருந்தாது. தற்காலத் தம்பதிகள் பெரும்பாலும் முன்ன தாகவே காதலுடாட்டத்திற்கு உட்பட்டு விடுவதால் இதற்கு இவ்வளவுகாலம் எடுத்துக்கொள்ளத்தேவை இல்.ை முடிந்தால் திருமணம் முடிந்து ஒருசில நாட்களுக்குள்ளேயே புணர்ச்சியை முற்றிலும் நிறைவுடையதாக்கி விடுவது மிகவும் நன்று. ஆன் குறியை நுழைப்பது மிகவும் வலியைத் தருவதாக இருந்தாலும், அல்லது மனைவியிடமும் ஐயுறவும் அச்சமும் அதிகமாக இருந்தாலும் முதற் புணர்ச்சியிலேயே ஆண் குறியை முற்றிலும் நுழைக்க முயல வேண்டியதில்லை. அடுத்துத் தொடர்ந்தாற்போல் நிகழும் பல புணர்ச்சிகளின் பொழுது படிப்படியாகவும் மென்மையாகவும் கன்னிச்சவ் வினை விரியச் செய்தால் பெண்ணின் நலக்குறைவு இல்லாது போவதுடன் அவளுடைய மனக்கவலையும் குறைதல் கூடும். எனினும், பொதுவாக முதல் அநுபவங்களே நலக்குறையினை விளைவிக்குமாயின், புணர்ச்சியை முற்றுப்பெறக் கொண்டு செலுத்துவதைப் பல நாட்களுக்குத் தள்ளிப்போடுதல் கூடாது. இதனை ஒத்திப்போடும் காலம் அதிக நீளமாக இருப்பதற்கேற்ப மனைவியிடம் கவலைபுணர்ச்சியும் அதிகரிக் கும்; கணவனிடமும் மனமுறிவு அதிகப்படும். யாதாவது ஒன்று அல்லது பிறிதொரு காரணத்திற்காகப் புணர்ச்சி நிறைவு பெறுவது தவிர்க்கப்பெற்றில், அஃது உடற்குறை விற்கோ அல்லது உள்ளக்கிளர்ச்சிபற்றிய சங்கடித்திற்கோ அடையாளமாகக் கருதப்பெறும் இந்நிலை ஏற்பட்டால் உடனே மருத்துவரின் யோசனையை மேற்கொள்வது நன்று; அஃது அறிவுடைமையுமாகும்.

4I. stra gri-tri-o-sh-Courtship

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/373&oldid=598363" இலிருந்து மீள்விக்கப்பட்டது