உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370

இல்லற நெறி


தில் முதுமகள் ஒருத்தியால் கன்னிச்சவ்வு துளையிடப்பெருத சிறுமிகளின் சவ்வினைத் துளையிடுவதையே தொழிலாகக் கொண்ட மனிதர்கள் ஃபிலிப்பைன் தீவுகளில் வாழ்ந்ததாக அறியக்கிடக்கின்றது. ஒரு சில எஸ்கிமோ வகுப்பாரிடம் கன்னிச் சவ்வினைக் கிழிக்கும் சடங்கு குலகுருவால் நிகழ்த் தப்பெறுகின்றது. சீன, ஜப்பான் நாடுகளில் சில பகுதிகளில் வாழும் சிலர் குழவிகளின் பிறப்புறுப்புகளை தாய் மாரோ அல்லது தாதியரோ பலமாகக் கழுவுவதால் இந்தச் சவ்வு வேண்டுமென்று செய்யாத முறையிலேயே அழிக்கப் பெறுகின்றது. இந்த நாடுகளில் வாழும் பல மருத்துவர்கள் இத்தகைய ஒரு சவ்வு பெண்களிடம் இருப்பதையே அறி யார் என்று சொல்லப்பெறுகின்றது. இந்த எடுத்துக்காட்டு களிளுல் கன்னிச் சவ்வினை நீக்குதல் கணவனின் பொறுப் பன்று என்பது அறியலாகும். கன்னிச்சவ்வினை நீக்குதல் ஒரு சடங்கின் ஒரு பகுதியாக நிகழ்ந்துவத்ததிலிருந்து கடவுளுக் குக் கன்னிமையைத்4 தியாகம் செய்யும் கருத்தினை அறிதல் எளிதாகும். இதை இவ்வாறு தியாகம் என்றுகொள்வதுடன் மணப்படுக்கையில் கணவன் கன்னிச் சவ்வினைக் கிழித்தல்ை வெற்றிகரமாகச் செய்யாததால் நேரிடக்கூடிய தீய விளை வினேப் பழங்குடி மக்கள் நன்கு அறிந்திருந்தனர் என்றும், அதனுல்தான் அவர்கள் கணவனல்லாத மூன்ருவது மனிதர் ஒருவரால் அவ்வாறு நீக்கும் செயலை மேற்கொண்டனர் என் றும் கொள்வது மிகவும் பொருத்தமாகும். சமூக, உள்ளக் கிளர்ச்சி பற்றிய, உணர்ச்சிக்கலேக்கோட்பாடுபற்றிய குறிப் பினைக் கன்னித்தன்மைக்கு ஏற்றியதெல்லாம் மானிடப் பண் பாட்டு வளர்ச்சியில் நாளாவட்டத்தில் ஏற்பட்டதாகும்.

மேற்கூறியவற்றிலிருந்து திருமணத்திற்கு முன்னர் கன் னிச் சவ்வின் நிலையைப் பரிசோதித்து அதற்குத் தக முன் னேற்பாட்டுடன் கன்னிச் சவ்வினைச் செயற்கை முறையில் விரித்துக்கொண்டால் தம்பதிகளிடம் விரைவில் ւսո 3yյ றவுப் பொருத்தபாடு ஏற்படுவதற்குத் துணையாக இருக்கும்

43. &&assau-Virginity

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/376&oldid=1285258" இலிருந்து மீள்விக்கப்பட்டது