பக்கம்:இல்லற நெறி.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398

இல்லற நெறி


யும் ஆணின் உச்சநிலை உணர்ச்சியும் ஒரே காலத்தில் ஏற் படச் செய்யலாம். எவ்வளவு தூண்டலை எவ்வளவு காலம் உண்டாக்கிலுைம் முழு அளவில் காமக் கிளர்ச்சியையே அவர்களிடம் எழுப்பமுடியாத எண்ண பிற பெண்கள் உள்ள னர். இப்பிரச்சினையைக் குறித்துப் பின்னர் ஆராய்வேன்.

இணைவிழைச்சு காலம்: சாதாரணமாக இணைவிழைச்சு எவ்வளவு காலம் நடைபெறல் வேண்டும் என்று அறிவதில் ஆவலுள்ளவகை இருப்பாய் என்று கருதுகின்றேன். புணர்ச் சிக்கு முன்னர் மேற்கொள்ளும் காதல் விளையாட்டு, புணர்ச்சி, புணர்ச்சிக்குப் பின்னர் மேற்கொள்ளும் ஒய்வும் தளர் நிலையும் சேர்த்துதான் இணைவிழைச்சு என்று கருதினல் இணைவிழைச்சின் கால அளவில் பல வேறுபாடுகள் உள்ளன. ஆண்குறியை நுழைப்பதிலிருந்து உச்சநிலை உணர்ச்சி ஏற் படும் காலம் வரைதான் கலவி என்பதாகக் கொண்டாலும் கூட, இக்கால அளவில் தனிநில்ை வேறுபாடுகள் இருக்கத் தான் செய்கின்றன. ஒர் ஆடவன் விந்து வெளியேற்றமின்றி விறைத்தலை அப்படியே வைத்துக்கொண்டிருக்கும் கால அளவு, பென் எளிதாக அல்லது சிரமமாக உச்சநிலை உணt கியை அடையக்கூடிய நிலை, புணர்ச்சி நடைபெறுங்கால் பாலிறுக்கம்' ஏற்படும் அளவு, அடிக்கடிப் பாலுறவு கொள் ளும் பழக்கம் போன்ற பல்வேறு கூறுகளைப் பொறுத்தே கலவிக் காலம் நீடிக்கின்றது. ஒரு சில ஆடவர்கள் கலவி யையே பதினைந்து அல்லது இருபது நிமிடகால அளவு விந்து வெளியேற்றமின்றி நிகழ்த்துதலும் கூடும்; மற்றவர்கள் ஒரு நிமிட அளவு கூட நீடித்து நிகழ்த்த முடியாத நிலையிலும் உள்ளனர். ஐந்து நிமிடத்திற்குமேல் கலவிபுரியக் கூடியவர் கள் ஒரு சிலரே உள்ளனர் என்பர் ஸ்டெக்கெல் என்ற அறிஞர். டிக்கின்சன்' என்பாரின் கருத்துப்படி ஒரு சராசரி மனிதன் ஐந்திலிருந்து பத்துநிமிடகாலம்வரை ஆண்குறியை

80. Lurrest på sih–Sexual tension 81. ஸ்டெக்கெல்-Stekel 82. Iąå størréo-Dickinson

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/404&oldid=1285270" இலிருந்து மீள்விக்கப்பட்டது