உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகள் 4 H3

ஆளுமைக்கூறுகள், உள்ளக் கிளர்ச்சிப் பாதுகாப்பின் அளவு, இருவரிடையேயுமுள்ள இணங்கிக் போகுந்தன்மை’ அவர்களுடைய சமூக, பொருளாதார நிலைகள், குடும்ப உறவுகள் ஆகியவைகளை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம், தொல்காப்பியர் கூறியுள்ள பத்து வகைப் பொருத்தங்களே யும் ஈண்டு சிந்தித்து உளங் கொள்வாயாக. எனினும், பாலுறவுக் கூறு மிகவும் மூக்கியமானது. ஏனெனில், இ கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள வேறு உறவுக் கூறுகளை நேர் முறையிலோ அல்லது நேரல் முறையிலோ: பாதிக்கின்றது. எனவே, பாலுறவும் பொருத்தக்கேடு களைத் தடுக்கக் கூடுமாயினும் அல்லது அவற்றைத் திருத்தக் கூடுமாயினும் திருமண உறவில் உறுதியான வெற்றியைக் காணலாம். இன்னுெரு செய்தியும் ஈண்டு அறியத்தக்கது. வேறு உறவு முறைகளிலுள்ள பொருத்தக் கூறுகள் சில சமயம் பாலுறவுக் கூறினேயும் குறைத்தல் கூடும். மன முவந்து மகிழ்ச்சியாகவுள்ள தம்பதிகளிடையே ஒரு சில t#rr GÐ பொருத்தக்கேடுகள் புறக்கணிக்கப்பெறுதலேயும் இன்று பல தம்பதிகளின் வாழ்க்கையில் காணலாம்; சில தம்பதிகளின் வாழ்வில் பரிசத் தொகை, தீபாவளிபொங்கல் பரிசு முறைகள், மாமியார் கொடுமை போன்ற கூறுகள் பெருங்கேடுகளை விளைவித்தலையும், அவை அவர்களை வேறு சங்கடங்களுக்குள்ளாக்குவதையும் நாம் காணுமல் இல்லை.

பண்டிருந்ததைவிட இன்று பால் பொருத்தம்பற்றிய பிரச்சினைகள் அதிகமாக நம் கவனத்திற்கு வருகின்றன. பொருளாதார நிலையாலும் பண்பாட்டு நிலையாலும் பெண் களிடம் ஏற்பட்டுள்ள உயர்ச்சி பண்டிருந்து பெண்களிடம் இருந்து வந்த உள் தடைகளை நீக்கிவிட்டன. அவர்களும் தம்முடைய பால் தேவைகளே தன்கு உணர்ந்துகொண்டனர். மனைவி பாலுறவுகளை ஒரு கடமையாக ஏற்றுக்கொண்ட

3. Gßrä0 Upsosp–In directy --------------- 4. 2-sirsso –– Inhibition

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/419&oldid=598467" இலிருந்து மீள்விக்கப்பட்டது