உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426

இல்லற நெறி


பால்விருப்பக் குறைவில் அல்லது பால் விருப்பமின்மையில் கொண்டு செலுத்தலாம். சில சமயம் உளக்கூறும் உடற் கூறும் சேர்ந்து பால்விருப்பமின்மையை விளைவித்தல் கூடும். ஒறு வயதிலிருந்தே இச்சுரப்பிகள் சரியாகச் செயற்படா விடின், பால் உறுப்புகள் சரியான முறையில் வளர்ச்சி யடையாகற் போதல் கூடும். மனவளர்ச்சி குன்றியதன் காரணமாகக் கு மரப் பருவத்தை எய்திய பெண்கள் வயது வந்தம் உச்சநிலை உணர்ச்சியைப் பெறக்கூடாத நிலையில் உள்ளனர். மேலும், அவர்களுடைய வெளிப்புற உட்புறப் பால் உறுப்புகள் மிகச் சிறியனவாக இருத்தலின் ஆண் குறியைச் செலுத்துவதும் இவர்களிடம் சிறிதும் சாத்தியப் படுவதில்லை.

உளக்கூறுபற்றி நிகழும் பால் விருப்பமின்மையும் உடற் கூறினச் சார்ந்தே ஏற்படுகின்றது பெரும்பாலும் கன்னிச் சவ்வு கிழிதலையொட்டியே இஃது உண்டாகின்றது. கன்னிச் சவ்வு மிக உறுதியாக இருந்து புணர்ச்சியின்பொழுது அஃது அதிக வலியை விளைவித்தால், ஏற்கெனவே நரம்புக் கோளா றுள்ள பெண்களிடம் அந்த வலியின் நினைவே பால் விருப்ப மின்மையில் கொண்டு செலுத்திவிடும். எனினும், மூளையில் ஏற்படும் உடல் உளக் கூறுகளின் காரணமாக உண்டாகும் பால் விருப்பமின்மையே அதிகமாக நேரிடுகின்றது.

ஆல்ை, இன்றுவரை கிடைத்துள்ள புள்ளி விவரங்களி லிருந்து மனிதர்களிடம் ஏற்படும் பால் துடிப்பின் வளர்ச்சி யில் பெரும்பாலும் சமுக, பண்பாட்டு, உள்ளக்கிளர்ச்சி பற்றிய கூறுகளே பெரும்பங்கு பெறுகின்றன என்று அறியக் கிடக்கின்றது. பிராணிகளின் படிவளர்ச்சி ஏணியை உற்று நோக்கிளுல், மேலே போகப் போகப் பால் செயலும் பால் விருப்பமும் குறைந்த அளவு ஹார்மோன்களைப் பொறுத் திருப்பதையும், அதிக அளவு மூளையையும் நரம்பு மண்டலத் தையும் .ெ 1றுத்திருப்பதையும் காணலாம். அங்குப் பால் நடத்தை குறைந்த அளவு இயல்பூக்கத்தின் அடிப்படை யிலும் அதிக அளவு கற்றலின் செயலாகவும் நடைபெறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/432&oldid=1285285" இலிருந்து மீள்விக்கப்பட்டது