பக்கம்:இல்லற நெறி.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456

இல்லற நெறி


டறிந்துள்ளனர். காய்ச்சலில்ை நேரிடும் உடல்நலக் சேடும், நீரிழிவு நோயும், சிறு நீரக நோய்களும் ஆன்மையைக் குறைத்து விடுகின்றன.

மூன்ருவது வகை ஆன்மைக் குறைவு ஆன் குறியின் கோளாறுகளைப் பற்றியதாகும். சிலர் ஆண் குறியின்றியும்: இன்னும் சிலர் இயல்பிகந்த முறையில் மிகச் சிறிய ஆன் குறியுடனும் பிறக்கின்றனர். இத்தகைய மனிதர்கள் மிகக் குறைவு. ஆண் குறியில் ஏற்படும் பல்வேறு வித ஊறுகளால் ஆண்மைக் குறைவு நேரிடுகின்றது:

பெண்களிடம் உள்ளது போலவே ஆண்களிடமும் உள்ளக்கிளர்ச்சிப் பற்றிய காரணங்களால் பால்விருப்ப மின்மை அல்லது பால் திறனின்மை உண்டாகின்றது. குழந்தைப் பருவத்தில் நேரிடும் இக்கட்டுகள், தாயி-சி வைத்திருக்கும் அளவுக்கு மீறிய பற்று, பல்வேறு அச்ச வகைகள், கவலை வகைகள், உள்ளக்கிளர்ச்சிப் போராட் டங்கள், நரம்பு நோய் பற்றிய அறிகுறிகள் உறங்கிய நில யிலுள்ள ஒரு பால்-புணர்ச்சி இயல்பு-ேஆகியவைபோன்ற உளக் கூறுகள் ஆடவனின் பால் வெறுப்பிற்கு அல்லது பால் திறனின்மைக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றன. ஆணின் பால் நடத்தைக் கோலம்87 குழந்தைப் பருவ அது பவங்களாலும் பயிற்சியாலும் உருப்படுகின்றது. பாலில் ஆணின் பங்கு என்ன என்பதுபற்றிய கருத்துகள், பெண் கிள் பால் அவன் கொண்டுள்ள மனப்பான்மை, அவனுடைய சமய, சமூக நோக்கங்கள் ஆகியவை யாவும் அவனுடைய பால் தேவைகளையும் பாற் செயல்களையும் குறிப்பிடத் தக்க அளவு பாதிக்கின்றன; சில சந்தர்ப்பங்களில் அவை அவனிடம் பால் வெறுப்பினையும் அல்லது பால் குறைவினை யும் விளைவித்து விடுகின்றன.

நீக்கும் முறைகள்: இனி மேற் குறிப்பிட்ட பால் குறை வினைப் போக்கும் முறைகளைச் சிறிது விளக்குவேன். முதலா

ss. sgeir5 Ljærsa Saislj-Homosexuality 67. gl-šāošā Qarwh—Behaviour pattern

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/462&oldid=1285300" இலிருந்து மீள்விக்கப்பட்டது