உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகள் 《6岳

ஒருபால்-புணர்ச்சி இயல்பு பெரும்பாலான பெண்களும் ஆண்களும் எதிர்பர்ல் புணர்ச்சி இயல்புடனுள்ளனர்; அஃ தாவது, எதிர்பாலாரிடம் பாலுறவு கொள்ளுவதஞலேயே இன்பம் அடைகின்றனர். ஆயினும், ஒரு சிலர்-கின்லேயின் கணக்குப்படி நான்கு சதவிகிதம் என்று சொல்லலாம்-ஒரு பால்-புணர்ச்சி இயல்பினை யுடையவர்களாயுள்ளனர். இத் தகைய இயல்பு எல்லா நாட்டு மனித சமூகத்தினரிடமும் காணப்பெறுகின்றது. பெரும்பாலும் இந்த இயல்பு முன்-கும ரப் பருவத்தினரிடையே அதிகமாகத் தலைக்காட்டுகின்றது; பெண்களை விட ஆண்களிடமே இப்பழக்கம் அதிகமாகவும் காணப்பெறுகின்றது. எதிர்பாலார் கிடைக்காததால்தான் இப்பழக்கம் தோன்றுகின்றது. வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகள் மனிதர்களை இத் தீய பழக்கத்தில் கொண்டு செலுத்துகின்றன. மாளுக்கர் விடுதிகள் போர் முகாம்கள், சிறைச்சாலைகள் போன்றவைகளில் ஆண்களும் பெண்களும் பிரிந்து இருக்க நேரிடுவதால் இத்தகைய ஒருபால் உறவுகள் தோன்றுகின்றன; இவற்றின் மூலம் அவர்கள் பால் வேட்கை யைத் தணித்துக் கொள்ளுகின்றனர். எதிர்பாலார் தொடர்பு ஏற்பட்டதும் இப்பழக்கம் பெரும்பாலும் மறைந்து விடுகின்றது. எனினும், ஒரு சிலரின் ஆளுமைக் குலேவின் காரணமாக இப்பழக்கம் நீடித்துவிடுகின்றது; எதிர்பாலாரின் சந்திப்பு ஏற்படினும் இக் கவர்ச்சிகளையே அவர்கள் நாடுகின்றனர். இங்ங்னம் அவர்களிடம் இத்த கைய பழக்கம் ஏற்படுவதற்குக் காரணம் இன்னும் தெளி வாக ஆராய்ந்து கண்டறியப்பெறவில்லை.

ஒருபால்-புணர்ச்சி இயல்பும் பால்பொருத்தக் கேட் டினை உண்டாக்குகின்றதா என்று நீ வினவலாம் கூறுவேன்; உண்டாக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. வாழ்க்கை யில் ஏதோ சந்தர்ப்பக்குறைவிஞல் ஒரு சிலரிடம் இத்தகைய பழக்கம் ஏற்பட்டு விட்டாலும், நல்ல சூழ்நிலை உண்டான பிறகு இப்பழக்கம் அவர்களிடம் தலைக்காட்டுவதில்லை.

86. oojoulé Gjáell--Persenality disturbance 蠍一30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/471&oldid=598584" இலிருந்து மீள்விக்கப்பட்டது