உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472

இல்லற நெறி


விக்க வேண்டும். இங்கு மணக்கப் போகும் ஆணும் பெண் னும் மணப்பதற்கு முன்னர் ஒருவர் மற்றவருடைய ஆளுமைக் கோலங்கள், மீப்பண்புகள், கவர்ச்சிகள், மதிப் பீடுகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை நன்கு அறிந்து கொள்ளல் வேண்டும்.

முதல் கருப்பம்: திருமணம் ஆனபிறகு எத்தனையாண்டு கள் ஈழிந்தபிறகு முகல் கருப்பத்திற்குத் திட்டமிடுதல் வேண்டும் என்று வினவியிருந்தாய், கூறுவேன்; இதில் யாரும் திட்டமாக அறுதியிட்டுக் கூறுவது சரியன்று: பெரும்பாலும் இது தம்பதிகளின் வயது, அவர்களின் உடல் நலம், அவர்களுடைய சமூக, பொருளாதாரநிலை, அவர்களு ட்ைய சொந்த விருப்பு-வெறுப்புகள் ஆகியவற்றைப் பொறுத்தது. ஒன்றிரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னர் பிள்ளைப்பேறு ஏற்படுவதுதான் சிறப்பு என்பது என் கருத் தாகும். வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்தவர்கள், வெவ்வேறு ஆளுமைகளை உடையவர்கள், வெவ்வேறு பழக் கத்தைக் கொண்டவர்கள் திருமணத்தினுல் ஒன்முக இணை கின்றனர். அன்று. வாழ்க்கையில் இவர்களிடையே முதலில் நல்ல பொருத்தப்பாடு ஏற்படுதல் வேண்டும். ஒருவர் மற்றவருடைய மீப்பண்புகளுடனும் எதிர்வினை களுடனும் ஒத்துப் போவதற்கும் ஒருவர் மற்றவருடைய நட்பை வளர்த்துக் கொள்வதற் கும் இவருடைய அன்பும் இணக்கமும் நன்கு உறுதிப்படுவதற்கும், நெருங்கிக் பொருந்துவதற்கும். தனிக் குடும்பத்தைச் செவ்வையாக நடித்திச் சமுகவாழ்வில் பொருத்தமுறுவதற்கும் இத் தனக்கும் மேலாகத் தாய் தந்தையராவதற்குப் பொருளா தார முறையிலும் உள்ளக் கிளர்ச்சி முதிர்ச்சியிலும் தம்மை ஆயத்தம் செய்து கொள்வதற்கும் சிறிது காலம் வேண்டுமல்லவா? இதற்கு ஒண்றிரண்டு ஆண்டுகளாவது பிள்னைப்பேறு ஏற்படாதிருக்க வேண்டுவது மிகவும் இன்றி யமையாதது. செல்வந்தர் குடும்பத்தினர்களும், ஏனைய வசதிகள் நிறையப் பெற்றவர்களும் இதற்கு விதி விலக்காக ofrio.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/478&oldid=1285308" இலிருந்து மீள்விக்கப்பட்டது