உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடல்நலம் 507

சமூக, உளவியல்பற்றிய கூறுகளும் இதில் பெரும் பங்கு பெறுகின்றன.

இளமையில் கலவியில் அதிகத் தீவிரமாகப் பங்கு பெறு வோர் வயது ஆக ஆக பால் திறனை இழப்பரோ என்ற ஐயம் உன்பால் எழலாம்; எழுவது இயற்கையே. உண்மை யில் அஃது அங்ங்னம் இல்ல்ை அதற்கு நேர்மாருன சான்று தான் உள்ளது. இளமையில் கலவியில் அதிகமாக ஈடுபடு வோர் பிற்காலத்திலும் அதிகத் தீவிரமாகவும் அடிக்கடியும் இச்செயலில் ஈடுபடுவதைத் தான் காண்கின்ருேம், உடல் நன் னிலைமையிருந்தமையால்தான் விரைவில் பால் விழைவும் பால் செயலும் தோன்றின என்றுதான் நாம் ஒரு முடிவுக்கு வருதல் வேண்டும்.

பால் அடக்கத்தின் விளைவுகள்: பால் அடக்கம் திங்கு பயக்குமா என்றும், பால் விழைவினை மணமறிந்து கட்டுப் படுத்தினுல் அதனுல் தீவிளைவுகள் ஏற்படுமா என்றும் வினவி யிருந்தாய். பால் அடக்கத்தை எல்லோரும் மேற்கொள்ள முடியாது; புலனடக்கப் பயிற்சியுள்ள ஒரு சிலரால் தான் அதனை அடக்குதல் முடியும். உணவு முறை, வாழ்க்கை முறை, தியான சமாதிகளை மேற்கொள்ளல் போன்ற உபா யங்களால் ஒரளவு கட்டுப்படுத்தலாம். எல்லோருக்கும் இம் முறைகள் சரிப்பட்டு வாரா, பால் விழைவினை வேருடன் களைவதென்பது குதிரைக் கொம்பு; இயலாத செயல். இணை விழைச்சினை அறவே நீக்குதலால் நலம் பயக்குமா என்ற பொருள் வாதத்திற்கிடமானது; பல்வேறு கருத்து வேறு பாடுகளைக் கொண்டது. பாலியலில் இதனைப்போன்ற வாதத் திற்கிடமான வேறு பொருளே இல்லை எனலாம். தொடர்ந்து பாலுறவுகளின்றி இருத்தல் முற்றிலும் கேடு பயக்காது என முன்னையோர் பொதுவாக நம்பி வந்தனர். அண்மைக் காலத்தில், அதுவும் ஃபிராய்டின் உளவியல் செல்வாக்குப் பெற்ற பிறகு, முற்றிலும் பெண்ணுறவின்றியே தன்னடக்

57. turrów z L–#sub-Sexual cortinence,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/513&oldid=598678" இலிருந்து மீள்விக்கப்பட்டது