உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடைய இல்வாழ்க்கை 荔器姆

என்ற நான்குவகையாக அமையும். இந்த நான்கிலும் பல உட்பிரிவுகளும் ஒவ்வொரு உட் பிரிவிலும் பல துறைகளும் உள்ளன.

கற்பு விளக்கம்: கற்பு என்பது, களவு முற்றிய தலை வனும் தலைவியும் இருவர் பெற்ருேரும் உடன்பட்டுப் பல் லோரிடையே மணம்புரிவிப்பித்ததும் மணந்துகொண்டு இல்வாழ்க்கையைத் நடித்துதலாகும். எனவே, கற்பு களவொழுக்கத்தின் கனி என்பதும், அன்பின் வெற்றி என்பதும் பெறப்படுகின்றது. 'மறை வெளிப்படுதல் கற்பு’’ ஆகும். இதுவும் மலிவு, புலவி, ஊடல், உணர்வு, பிரிவு என்று ஐந்து வகையாக அமையும். அவற்றுள் மலிவு என்பது, களவு முற்றி மணந்துகொண்ட காதலர், மனக்குறை திரக் கூடிக் கலந்து இன்புற்று வாழ்தல் ஆகும். மலிவு-மகிழ்ச்சி. புலவி, ஊடல், உணர்வு என்ற இம்மூன்றும் ஒன்றையொன்று பிரிக்க முடியாத பொருள்களாகும். புலவி என்பது, தலைவி தலைவனிடத்திலுள்ள அன்பில் சிறிது மாறுபட ஒழுகுவது. புலவி-மனவேறுபாடு. அந்தப் புலவி நீட்டிப்பின் அஃது ஊடல் எனவும், ஊடல் மிக்கது துணி எனவும் வழங்கப் பெறும், தலைவனின் வேண்டலால் தலைவி ஊடல் தனித்து அன்புறுவதை உணர்த்த உணர்தல் உணர்வு ஆகும். பிரிவு என்பது, தலைவன் ஒதல் பகை துாது காவல் பொருள் முதலியவற்றின் பொருட்டுத் தலைவியை விட்டுப் பிரிவ தாகும். இவற்றிலும் பல உட்பிரிவுகளும் ஒவ்வொன்றிலும் பல துறைகளும் உள்ளன.

எனவே, மேற்கூறியவாறு பண்டைத் தமிழர்களிடம் காணப்பெற்ற பழக்கங்களாகிய உலக வழக்கினேயே பொரு வாகக் கொண்டு பழந்தமிழ்ப் புலவர்கள் இலக்கியம் செய் தனர். இதுவே உலக வழக்கினே அழகுறப் புனைந்து புலவர் பாடும் செய்யுள் வழக்கமாகும். இங்ங்ணம் தமிழ் இலக்கியங் களிலும் தமிழ் இலக்கணங்களிலும் புலனெறி வழக்கமாகக் காணப்பெறும் தமிழரின் மணவாழ்க்கையை இன்றைய மண

இ-34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/535&oldid=598726" இலிருந்து மீள்விக்கப்பட்டது