உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணப்பொருத்தம் 49

நெட்டை அல்லது குட்டை, சிவப்பு அல்லது கறுப்பு நிறம், அழகு அல்லது அழகின்மை, கோபம், பிடிவாதம், கருணை, இரக்கம் போன்ற பல குணங்களும் இந்த நிறக்கோல்களுக் குள் அடங்கியுள்ளன. இவற்றுடன் இரு சாராரின் குடும்பத் தில் உள்ள மூதாதையரின் குணங்களையும் இவை தம்முளே ஒளித்து வைத்துக் கொண்டுள்ளன.

இன கிறக்கோல்கள்: இன்னுெரு முக்கிய செய்தியையும் ஈண்டு நீ அறிந்துகொள்ளுதல் வேண்டும். மானிட உயிரணு வில் 23 இணை நிறக்கோல்கள் உள்ளன என்று மேலே சொன் னேன். பெண் உயிரணுவிலுள்ள ஒவ்வோர் இணையின் உருவமும் ஒரேமாதிரியாக இருக்கும். ஆனல், ஆண் உயிரணு வில் 22 இணைகள் மட்டிலும் அவ்வாறிருக்க ஓர் இனை மட்டி லும் உருவத்தில் வேறுபட்டிருக்கும். படம்3-இல் இறுதியாக உள்ளவற்றைப் பார்த்து இதனைத் தெளிவு பெறுக. இந்த உருவ வேறுபாடுள்ள நிறக்கோல்கள்தாம் ஒரு குழந்தை ஆளு. பெண்ணு என்று அறுதியிடுகின்றன. ஆதலின் இவை இன கிறக்கோல்கள் என்று வழங்கப்பெறுகின்றன. இவற்றை நுண்பெருக்கி வழியாக உற்று நோக்கிளுல் பலவித தோற்றங்களைக் காணலாம் அதற்குத் தக்கபடி அவற்றிற்கு எக்ஸ் (:) நிறக்கோல் என்றும், "ஒய் (y) நிறக்கோல் என்றும் பெயரிட்டிருக்கின்றனர். பெண் உயிரணுவிலுள்ள இருபத்து மூன்ருவது இணையான இன நிறக்கோல் எப்பொழுதும் "எக்ஸ் ஆகத்தான் உள்ளது. ஆல்ை, ஆண் உயிரணுவிலுள்ள இருபத்து மூன்ருவது இணையில் திறக்கோல் எக்ஸ்’ ஆகவும் இருக்கலாம்; அல்லது "ஒய் ஆகவும் இருக்கலாம். உயிரணுக்கள் முதிர்ச்சி பெற்று முட்டையாகவும் விந்தனுவாகவும் மாறுங்கால் அவை ஒவ்வொன்றிலும் 23 நிறக்கோல்கள் (உயிரணுவிலுள்ள வற்றில் பாதி)தானிருக்கும் என்றும் மேலே கூறினேன். இவை ஒவ்வொன்றும் இணைக்கொன்ருக 23 இணை களி லிருந்தும் வந்தவை. ஆகவே, முட்டையில் எப்பொழுதும் "எக்ஸ் நிறக்கோல் ஒன்றிருக்கும். ஆனல், விந்தணுவில் எப்பொழுதும் எக்ஸ்’ நிறக்கோல் இருக்கும் என்பதில்லை; சிலவற்றில் எக்ஸும் சிலவற்றில் ஒய்"யும், இருக்கும்;

இ; நெ-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/55&oldid=598758" இலிருந்து மீள்விக்கப்பட்டது