பக்கம்:இல்லற நெறி.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554

இல்லற நெறி


உண்டாகிவிட்டது. கார் வாங்கவேண்டும் என்று என்னி டம் தெரிவித்தார். நான் அவரிடம், அன்பரே, கார் வாங்க வேண்டியது அவசியம். நீரோ இளைஞர்; மாதந் ேதாறும் வாங்கும் அதிகப் பணத்தை என்னதான் செய்வது? நீர் கார் வாங்குவதற்கு முன்னர் அதனைக் கடவும் முறையை அறிந்து கொள்வீர்; வண்டியோட்டிக்குத் தரவேண்டிய சம்பளம் மீதமாகும். தவிர, காரின் பொறிநுட்பத்தையும் ஒரளவு நன்கு அறிந்துகொண்டால், வண்டியில் யாதாவது பழுது ஏற்பட்டால் அஃது எதல்ை, எங்கு விளைந்தது என்பதை உறுதியாக நீங்களேஒரளவு அறுதியிடலாம். குறைந்த செல வில் பழுதினைச் சரிப்படுத்த இந்த அறிவு துணை செய்யும்? என்று கூறினேன். அதற்கு அவர் "மிஸ்டர் திருவேங் கடத் தான். நான் சுமார் இருபது யாண்டுகளாக மிதிவண்டி80 வைத்திருக்கின்றேன். ஆல்ை. அந்த வண்டியின் பாகங்களின் பெயர்களைக்கூட அறியேன். வண்டியில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், வண்டியை உடனே பழுது பார்ப் போரிடம் கொடுத்துச் சரிப்படுத்தித் கொள்வது வழக்கம், இந்நிலையில் நான் காரின் பொறிநுட்பத்தைக் கற்றுக்கொள் வது எங்கே?' என்ார். உடனே நான், இதில் என்ன அதி சயம்? நீங்கள் மட்டும் என்ன? வழி வழி வரும் நமது மூதாதையர் யாவரும் நமது உடலின் பொறிநுட்பத்தைச் சிறிதேனும் அறிந்து கொள்ளாமலேயே கலவி புரிந்து வரு கின்றனர்; குழவிகளைப் பெற்றும் வருகின்றனர். நிமிடந் தோறும் இனப்பெருக்கம் நடைபெற்றுக்கொண்டுதான் வரு கின்றது!’ என்று பதிலிறுத்தேன். இந்த நகைச்சுவை அரு கிலிருந்த நண்பர்கட்கும் ஒரு விருந்தாகவே அமைந்தது. இன்று விடுப்பூக்கம் பலருக்குப் பல துறைகளில் உள்ளது என்பது உண்மையே. ஆயினும், பெரும்பாலோருக்கு உடவின் பொறிநுட்பத்தை அறிந்துகொள்ளவேண்டும் என்ற விடுப்பே இல்லை. நிற்க.

29. Gut 5 . h–-Mechanism 30. LÉ statsstu 14.–Cycle. 31, otoké sub-Instinct of curiosity

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/560&oldid=1285349" இலிருந்து மீள்விக்கப்பட்டது