பக்கம்:இல்லற நெறி.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடைய இல்வாழ்க்கை 557

இரண்டாவது படி: இளம் வயதினர் தம்முடைய வாழ்க் கைத் துனேயை யோசித்து நன்முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது இரண்டாவது படியாகும். பெரும்பாலான நாடுகளில் துணைவியை அல்லது துணைவனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு குடும்பங்களையே சார்ந்துள்ளது. குடும்பத்திலுள்ள பெற்ருே.ர்களும் ஏனைய மூத்தோர்களும் மணப் பெண் அல்லது மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கின் றனர். தம்பதிகட்கு இதில் கிறிதும் பொறுப்புமில்லை, அண்மைக் காலத்தில் இப்பழக்கம் மாறிக்கொண்டு வரு கின்றது கல்வியறிவில்லாதவர்களும் தம் பெண் அல்லது மாப்பிள்ளையைத் தாம் தெரிந்தெடுத்த மாப்பிள்ளை அல்லது பெண்ணின் மனத்திற்குப் பிடித்தமா என்று வினவும் பழக்கம் தலைக்காட்டி வருகின்றது. படித்தவர்களிடம் இப் பழக்கம் தெளிவாகவே மாறி வருகின்றது. பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவருக்கொருவர் பழகும் வாய்ப்பு அளிக் கப்பெருது போயினும் ஒருவரை யொருவர் பார்க்கும் வாய்ப்பு பெரும்பாலும் தரப்பெறுகின்றது. திருமண வயது வந்த பிறகும் பெ ரும்பாலோருக்கு சில செய்திகளை அறிந்து கொள்வதற்கு அநுபவம் போதாது. பெற்முேர் அல்லது மூத்தோரின் துணை அவற்றில் இன்றியமையாது வேண்டப் பெறுவதாகும்.

இன்று மேல் நாடுகளில் இளைஞர்களே தம் துணைவர் களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளத் துணைபுரியும் வகையில் அறிவியலடிப்படையில் சோதனைகளையும் விளுத்தாள் முறை களையும் ஆயத்தம் செய்வதில் முயற்சிகள் மேற்கொள்ளப் பெற்று வருகின்றன. இவற்ருல் தம்பதிகளிடையே இருக்க வேண்டிய பொருத்தக் கூறினையும் திருமண வெற்றியைப் பற்றிய கூறுகளையும் அறுதியிட்டுவிடலாம் என்று ஆய்வாளர் கள் நம்புகின்றனர். இத்தகைய சோதனைகள் கில விஷயங் களில் உள்ள தடைகளையும் இடையூறுகளையும் எங்ங்னம் சமாளிக்கலாம் என்பதைத் தம்பதிகள் ஓரளவு அறிந்து கொள்வதற்குத் துணை செய்யலாம். ஆயினும், துணைவரைத் தேர்ந்தெடுக்கத் துணைபுரிவதற்கேற்றவாறு இதுகாறுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/563&oldid=598788" இலிருந்து மீள்விக்கப்பட்டது