பக்கம்:இல்லற நெறி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணப்பொருத்தம் 53

மிகவும் ஆற்றல்வாய்ந்தவை என்று வைத்துக்கொள்வோம்: குட்டையான தாய்க்குப் பிறந்த குழந்தையாயினும், அவன் நெட்டைத் தன்மை வாய்ந்த ஜீனின் வலிமையில்ை தந்தை கைய ப் போலவே மிகவும் உயரமாக வளர்வான்.

ஒர் யிரின் மரபுவழியில் பின்தங்கி நிற்கும் ஜீன்கள் அடியோடு மறைந்து போவதில்லை. சேவிட்டு மையராக இருப்பது மரபுவழியாகவந்த கூறே என்பதை நீ அறிக. அதற் கென உள்ள ஜீன்கள் பின்தங்கி நிற்பவையாகும். சாதாரண மனிதனுக்கும் ஒரு செவிட்டுமைப் பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தைகள் சாதாரணமாகப் பேசக் கூடியவைகளாகவே இருக்கும்; அவர்களின் காதும் நன்கு கேட்கும். ஆனல் இம் மாதிரி பிறந்த குழந்தை ஒரு செவிட்டுமையுடன் சேர்ந்த தாலோ அல்லது தன்னைப்போலச் செவிட்டுமைக்குப் பிறந்த வர்களுடன் சேர்ந்ததாலோ பிறக்கும் குழந்தைகளில் சில செவிட்டுமைகளாக இருக்கும். இங்ங்ணமே. தவிட்டுநிறக் கண்களையுடைய தாய் தந்தையர்கட்கு நீல நிறக்கண்களை யுடைய குழந்தைகள் பிறப்பதற்கும் இதுவே காரணமாகும். தாய்தந்தையர் தலைமுறையில் ஒளிந்து கிடந்த நீல நிறக் கண்ணையுண்டாக்கும் பண்பு அடுத்த தலைமுறையில் தலை காட்டியுள்ளது. அஃதாவது, குழந்தையின் பாட்டன் பாட்டி யாரிடம் பின்தங்கி நின்ற நீல நிறக் கண்களைத் தரும் பண்பு பேரன் பிறப்பின் போது ஓங்கி நின்றதே நீலநிறக் கண் னுடன் இருப்பதற்குக் காரணமாகும்.

ஆணின் விந்தணு பெண்ணின் முட்டையணுவுடன் சேரும் நிலையில் தாய் தந்தையிடமுள்ள 43 நிறக்கோல்களில் 23 தாயிடமிருந்தும் 23 தந்தையிடமிருந்தும் சேர்கின்றன என்பதை மேலே கூறினேன். படத்தின் மூலமும் அறிந்து கொண்டாய். இவ்வாறு நிறக்கோல்கள் பாதியாகக் குறை யும் பொழுது இணை இணையாக அவைகளில் காணப்பெறும் ஜீன்களும் தங்களுடைய இணையை இழந்து ஒற்றையாகி விடு

60, gait.Gopā fair—Brown eye.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/59&oldid=598846" இலிருந்து மீள்விக்கப்பட்டது