உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணப்பொருத்தம் 59

பங்கையும் மண்ணின் பங்கையும் அறிந்தால்போதுமானது. விரையினுள் அது ஒருவகைத் தாவரமாக வளரும் ஆற்றலின் கூறு அடங்கியுள்ளது; அது நல்முறையில் வளர்வதும் நன்றல் லாத முறையில் வளர்வதும் அஃது அடையும் மண்ணைப் பொறுத்துள்ளது. அது பாறையில் விழுந்தாலும் வெயிலில் விழுந்து நசுக்குண்டாலும் முளைப்பதில்லை. அஃது அதிகமான நீருள்ள அல்லது வறட்சியையுடைய வளமற்ற மண்ணில் விழுந்தாலும் முளைக்கும்; ஆனுல் நீண்ட காலம் வாழாது, அல்லது பயன் தராது. கோயில்கள் .ே பா ன் ற கட்டிட இடுக்குகளில் விழுந்தால் என்ன நேரிடம் என்பதை நீ நன்கு அறிவாய். விரை நல்ல நிலத்தில் வீழ்ந்து உரம், நீர், வெயில் போன்ற சாதகமான நிலைமைகளைப் பெற்ருல், அஃது ஒரு சிறந்த தாவரமாக வளரும்; நிறைந்த பயனையும் தரும். தாவர வளர்ச்சிக்கு விரையும் வேண்டும்; மண்ணும் வேண்டும். ஒன்றில்லாமல் மற்முென்ருல் வளர்ச்சி என்பதே இல்லை. இரண்டும் தனித்தனியாகவும் செயற்பட முடியாது; இரண்டும் ஒன்றையொன்று தழுவி நிற்கின்றன இவ்வாறே ஒரு குழந்தையின் வளர்ச்சியிலும் மரபுவழியும் சூழ்நிலையும் இன்றியமையாத பங்கினைப் பெறுகின்றன. மரபுவழி ஒருவ னுக்குச் சாத்தியமாகக்கூடிய கூறுகளைக் குறிக்கின்றது; சூழ்நிலை அவற்றைச் சிறந்த முறையில் வளர்க்கும் வாய்ப் பினைத் தருகின்றது; அவ்வளவுதான். இப்பொழுது ஒருவர் வாழ்க்கையில் மரபுவழியும் சூழ்நிலையும் பெறும் பங்கு உனக் குத் தெளிவாக விளங்கியிருக்கும் என எண்ணுகின்றேன்.

சில நோய்கள்: மேற்கூறியவற்றிலிருந்து ஏதாவது சில குறைகளுடன் பிறக்கும் குழந்தையிடம் அக்குறைகளை"

76. விரை-வித்து; விரை-மணம்; மனத்தைத்தரும் பூவிலுள்ள பொடி; இதுதான் தாவரத்தின் ஆண் உயிரணு; இதுவே முட்டையுடன் (Ovut) சேர்ந்து வித்தாகின்றது; எனவே, விரை வித்தினைக் குறிக்

கின்றது:

77. S ssg sér—Defect.s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/65&oldid=598878" இலிருந்து மீள்விக்கப்பட்டது