உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய அரசாங்கக் கல்வித்துறைத் துணை - அமைச்சர் டிாக்டர் செளந்திரம் இராமச்சந்திரன் அவர்களின்

முன்னுரை

பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் அவர்களுடைய "இல்லற கெறி" என்ற புத்தகத்தைப் படித்தேன். வேலனுக்கு வேங்கடத்தான் எழுதும் கடிதங்கள் மூலமாக ஆசிரியர் இல்லற நெறியைப் பலகோணங்களிலிருந்தும் விளக்கியிருக் கின் மூர்: ஆங்கிலத்தில் இதுபோன்ற புத்தகங்கள் ஏராள மாக உள்ளன. இளந்தம்பதிகள் அவைகளை விருப்பத்துடன் படிக்கின்றனர். தற்காலத் தேவைக்கேற்பத் தமிழில் அத்தகைய நூல்கள் மிகவும் அவசியம். பேராசிரியர் ரெடிடியார் அந்த அவசியத்தை உணர்ந்து அதனை ஒருவாறு நிறைவேற்ற முன் வந்தது மிகவும் பாராட்டுதற்குரியது.

பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் அவர்கள் வெகு கிரத்தையுடன் முயற்சி எடுத்து "இல்லற நெறியை எழுதி யிருக்கின்ருர், இல்லறத்தை வெற்றியுடன் நடத்த மனுே தத்துவ ரீதியில் அதிகம் ஆலோசனை கொடுப்பது மிகவும் அவசியம். அங்க அமைப்பு விவரங்களின் விஸ்தரிப்பைக் குறைத்திருந்தால் புத்தகத்தின் பளுவும் குறைந்திருக்கும். ஆனல் தமிழ்நாட்டுப் பொதுமக்களுக்கு விஞ்ஞான அறிவு குறைவாக இருக்கும் எனக் கருதி அப்பகுதியை விஸ்தார மாக அழுதியிருக்கின்ருர் போலும்!

氫)一1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/7&oldid=598888" இலிருந்து மீள்விக்கப்பட்டது