பக்கம்:இளந்தமிழா.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



யவனன் பாட்டு


கிளையில்லை நிழலில்லை
பூவில்லை கனியில்லை
பொன் பசுமை கரும் பச்சை இல்லை
தழையில்லை தழைத்திடவும் இனியோர்
அரும்பில்லை மொக்கில்லை
வேரில்லை மேதியினில் பற்றில்லை
மென்காற்றின் தழுவலினல் விளையும்
சிலிர்ப்பில்லை கலகலப்பும் இல்லை
தேடிவந்து பாடிமகிழ் சிறு பறவை இல்லை
பாலைவனம் வீழ்ந்த இந்தப் பருமரத்தைப் போலே
ஆருமில்லாத் தனியானேன் ஆஹாஹா யுத்தம்!


இரண்டாம் உலக யுத்தத்தில் உயிர் தப்பித் தன்னந் தனியணாய் இந்தியாவில் தஞ்சம் புகுந்த யவன தேசத்தான் ஒருவன் பாடுவதாகத் தழுவற் கவிதை. கிரேக்கநாடு போரிலே பெரிதும் துன்புற்றது. மக்கள் ஆயிரக்கணக்கில் மாண்டனர். ஒரு கணத்தில் மனைவி மக்கள் உற்றார் உறவினர் அனைவரையும் இழந்தவர் எத்தனையோ பேர். அவ்வாறு துயருழந்த ஒருவன் எண்ணங்களை இது தெரிவிக்கிறது.


93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/95&oldid=1460167" இலிருந்து மீள்விக்கப்பட்டது