உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.8

இவரின் தாயகம் ஈராக் நாடாகும். நாற்பதாம் வயதில் நபிப்பட்டம் பெற். றார். ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் தம் மக்களிடையே ஒரிறை வணக்கத்தை வற்புறுத்தி வந்தார். மக்கள் எவரும் இப்பிரச்சாரத்துக்குச் செவி சாய்க்க வில்லை. மாறாக நூஹ் (அலை) அவர் களை ஏசியும் அடித்தும் துன்புறுத்தி யும் வந்தனர். மிருக உணர்வு கொண்ட இம்மக்கள் திருந்த இனி வழியே இல்லை என்பதை உணர்ந்தார். இம்மக்களை அழித்துவிட இறைவனிடம் இறைஞ் சினார். அப்போது இறைவன் ஒரு கப்ப லைக் கட்டுமாறு இவருக்குப் பணித் தான். இவரும் இரண்டாண்டுகள் கடு மையாக உழைத்து, பல அடுக்குகள் கொண்ட பறவை வடிவிலான கப்ப லைக் கட்டி முடித்தார்.

இறைவனின் ஆணைப்படி ஒரே இறை வனை வணங்கும் வணக்கதாரிகளும், உலகின் உயிரினங்களில் ஒவ்வொரு ஜோடியும், பல நாட்களுக்குத் தேவை யான உணவுகளும் கப்பலில் ஏற்றப் பட்டன.

இறையின் திருவுளப்படி கடும் மழை கொட்டியது. எங்கும் ஒரே வெள்ளக் காடாகியது. பெருகியோடிய நீரினிடை யே கப்பல் மிதக்கலாயிற்று. ரஜப் மாதம் முதல் நாளிலிருந்து துல்ஹஜ் மாதம் இறுதி நாள்வரை சுமார் ஆறு மாத காலம் இக்கப்பல் உலகைச்சுற்றி வலம் வந்தது. இறுதியில் மழை நின்றது: நீர் வடிந்தது. கப்பல் ஜூதி மலைமீது நின்றது. இறைவன் ஆணைப்படி முஹர் ரம் பத்தாம் நாள் கப்பலிலிருந்து உயி ரினங்களும் நூஹ் (அலை) அவர்களின் குடும்பத்தினரும் பிறரும் வெளிப்பட்ட னர்.

அதன்பின்னர் நூஹ் (அலை) 60 ஆண்டுகள் உலகில் வாழ்ந்து ஒரிறை வணக்க முறையிலான இறை நெறியை மக்களிடையே பிரச்சாரம் செய்து வந்

நொண்டி நாடகம்

தார். அவர் காலமானபோது, அவரது உடல் பைத்துல் முகத்தஸில் நல்லடக் கம் செய்யப்பட்டதாகக் கூறப்படு கிறது.

கொண்டி நாடகம்: இ ஸ் லா மிய த் தமிழ்ப்புலவர்கள் தமிழுக்கென உரு வாக்கிய இஸ்லாமிய இலக்கிய வடிவங் களுள் நொண்டி நாடகமும் ஒன்றாகும். பழந்தமிழ் இலக்கிய வகைகளுள் ஒன் றாக நொண்டி நாடகம் குறிக்கப்பட வில்லை. இதனால் இவ்வகை இலக்கிய வடிவம் பிற்காலத்திலே உருவாக்கப் பட்டது என்பது தெளிவாகும்.

தமிழில் உள்ள நொண்டி நாடகம் ' செய்தக்காதி நொண்டி நாடக' மாகும். தவறு செய்யும் ஒருவன் தண்ட னைக்குள்ளாகிக் கால் வெட்டப்படு கிறான். வள்ளல் ஒருவரின் பொருளு தவியோடு ஹஜ் செல்கிறான். மக்கா வில் தன் இழந்த காலை மீண்டும் பெறு கிறான். இதுதான் கதைக் கரு.

இனிய இசை ஓசையுடைய நொண்டிச் சிந்துவில் பாடல்கள் அமைந்துள்ளன. ஊர் நடுவே உள்ள மேடையில் கையில் இசைக்கருவியுடன் ஒற்றைக் காலை மடித்துக் கட்டிக் கொண்டு தன் கதை யைக் கூறுவான். பல்வேறு பாத்திரங் களாகத் தானே மாறி நடிப்பான்.

தவறு செய்யத் தூண்டும் சமூகத்தின் கோணல் நிலைகளைச் சுட்டிக்காட்ட வந்த அங்கத (Saire) நாடகமாகும் இது. தவறை உணர்ந்து, இறை மன்னிப் புக் கேட்போருக்கு இறையருள் கிட்டும் என்பதையும் இந்நாடகம் உணர்த்து கிறது. சீதக்காதியின் வள்ளன்மையைக் கூறுவதால் அவரின் பெயரால் செய் தக்காதி நொண்டி நாடகம்' என அழைக்கப்படுகிறது. இதன் ஆசிரியர் யார் எனத் தெரியவில்லை.

இந்து சமயத்தைச் சேர்ந்த ஆசிரியர் பலரால் பல்வேறு தலைப்புக்களில் 8