பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

அதான்

உள்ள இந்தியப் பகுதிகள் அனைத்தையும் தம் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். இவர் ஐம்பது ஆண்டுகள் பேரரசராக இந்தியாவை ஆண்டு வந்தார். இவர் தம் குடிமக்களின் நல்வாழ்வையே உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். இதற்காகப் பல சீர்திருத்தங்களைச் செய்தார்.

அக்பர் பரந்த மனப்பான்மையுடையவராக விளங்கினார். அனைத்துச் சமயத்தவர்களும் சம உரிமையுடன் சமத்துவமாக வாழவேண்டும் என விரும்பினார். இதற்காக மக்களிடையே காணப்பட்ட இன, சமய, மொழி, நிற வேறுபாடுகளை அகற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதன் விளைவாக இஸ்லாம், இந்து, சீக்கிய சமயங்களின் முக்கிய கொள்கைகளையெல்லாம் கொண்ட புதிய சமயம் ஒன்றை உருவாக்கினார். அதற்கு 'தீனே இலாஹி' எனப் பெயரிட்டார். ஆனால், இதற்கு மக்களிடையே ஆதரவு இல்லாததால், இது அவர் காலத்துக்குள்ளாகவே மறைந்து விட்டது.


அத்தா : தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களில் கஹனபிகள் தந்தையை 'அத்தா' என்று அழைக்கின்றனர். துருக்கிய மொழியிலும் தந்தையை குறிக்க 'அத்தா' என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனர். துருக்கியின் மறுமலர்ச்சிக்கு மாபெரும் தொண்டு செய்த முஸ்தபா கமாலை 'அத்தா துர்க்' என்று பெருமையாக அழைக்கின்றனர். இதற்குத் 'துருக்கியின் தந்தை' என்பது பொருளாகும். எனவே, இச்சொல் துருக்கிச் சொல்லாக இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

ஆனால், தமிழில் 'அத்தன்' என்ற சொல் 'தந்தை' எனும் பொருளில் இறைவனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சங்க இலக்கியத்தில் கூட தந்தை என்ற பொருளில் 'அத்தா' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அத்தா என்பது நீண்ட நெடுங்காலமாகத் தமிழில் இருந்து வரும் தமிழ்ச் சொல்லே என்று வேறு சிலர் வாதிடுகின்றனர்.

அத்தா என்ற சொல் முதல் மனிதரான - எல்லோருக்கும் ஆதித் தந்தையான ஆதம் என்ற சொல்லினடியாகப் பிறந்தது என்ற கருத்தும் இருந்து வருகிறது. இதனால் அத்தா என்ற சொல் உலகெங்கும் இருப்பதில் வியப்பு இல்லை அல்லவா?

அதான் : இது அரபிச் சொல்லாகும். தொழுகைக்கான நேரம் வந்ததும் மக்களைத் தொழ, பள்ளிவாசலுக்கு அல்லது தெழுகைத் தலத்துக்கு வருமாறு அழைப்பதே 'அதான்' ஆகும். இத் தொழுகை அழைப்பொலி 'பாங்கு' என்று பார்ஸி மொழியில் அழைக்கப்படுகிறது. 'பாங்கு' எனும் இச்சொல்லே தமிழ்நாட்டில் பெருவழக்காக உள்ளது.

தொடக்கத்தில் தொழுகை நேரம் வந்தவுடன் பிலால் (ரலி) அவர்கள் தெருவில் சென்று அஸ்ஸலாத்துன் ஜாமி அ(த்)தன்' என்று மக்களைத் தொழ அழைத்தார்கள். 'தொழுகைக்கு ஒன்றாகக் கூடுங்கள் என்பது இதன் பொருளாகும்.

பிறகு, கிப்லாவாக கஃபத்துல்லாவை நோக்கித் தொழ இறையாணை வந்தது. அதன்பின் தொழுகை அழைப்புக்கு எம்முறையைக் கடைப்பிடிப்பது எனப் பெருமானார் தோழர்களோடு