பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாத்திமா

யாக இருந்தபோது நேரில் கண்டு

மனம் வருந்தித் துடித்தவர் பாத்திமா

(ரலி).

அப்போது ஒரு தா ன் கஃபாவில்

தொழுது கொண்டிருந்த பெருமானார் அவர்கள் கழுத்தில் ஆட்டின் சிறு குடலை மாலையாகப் போட்டு, கை கொட்டிச் சிரித்தான் உக்பா எனும் கொடியவன். தம் தந்தையின் உடல் மீது பட்ட அக்குடலை அழுதவண்ணம் நீக்கி, அவரது உடலை நீரால் கழுவி னார் அன்பு மகள் பாத்திமா (ரலி). அழுது துடித்த பாசம்களுக்கு ஆறுதல் கூறித் தேற்றினார். அன்புத் தந்தை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா சென்ற பின்னர் பாத்திமா (ரலி) மதீனா

வுக்கே அழைத்துத்தங்களுடன் வைத்துக் கொண்டார். பாத்திமா (ரலி) பருவ மடைந்தபோது, அவரது அழகையும், இணையிலா ஒழுக்கத்தையும், பண்பா டான போக்குகளையும், இறை உறுதி யையும் கண்ட செல்வர் பலர் அவரை மணம் செய்து கொள்ள விரும்பினர். பெரும் செல்வத்தை மஹராகத் தந்து

மணம் முடிக்கத் துடித்தனர். பெரு மானார் பேரன்புக்குரிய அணுக்கத்

தோழர்களான அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அப்துர் ரஹ் மான் இப்னு ஆகியோரும் பெரும் பொருளை மஹராகத் தந்து செய்துகொள்ள விரும்பினர்.

அவ்ப்

மனம் ஆனால் இறை ஆணைப்படி வறியவ ரான வீரர் திலகம் அலீ (ரலி) அவர் கட்கு மிகக் குறைந்த மஹருக்குப் பாத்திமா (ரலி)வை மணம் முடித்துத் தந்தார் பெருமானர் அவர்கள். இருவ ரின் இணையிலாப் பொருத்தத்தை உலகமே புகழ்ந்து போற்றியது.

இஸ்லாமியத் திருமணம் எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கு இவர்

夏夏岔

களின் நிக்காஹ் ஒரு முன் உதாரண

மாகும். ஆடம்பரமற்ற முறையில் எளிமையாக நடைபெற்றது. பெரு

மானார் அவர்கள் தம் அன்பு மகளுக் குத் தந்த சீதனப் பொருட்கள் ஒரு மூங்கில் கட்டில், தோலாலான் விரிப்பு. நீர் எடுக்கப் பயன்படும் ஒரு தோல்

துருத்தி, தோல் தலையணை, தண்ணிர் குடிக்கப் பயன்படும் ஒரு

குவளை மாவு அரைக்கும் ஒரு திருகை இவை மட்டுமே யாகும்.

தம் அன்பு மகளின் திருமணத்திற் கென்று புதுப்பொருளாக ஒரு குப்பா யம் தைத்துத் தந்திருந்தார் அன்புத் தந்தை. அதையும் திருமணத்தன்றே

குளிரால் நடுங்கிய வறிய முதியவர் ஒருவருக்குத் தானமாகத் தந்துவிட் டார் கருணை வடிவான பாத்திமா (ரலி).

திருமணமான ஒரு பெண் புகுந்த வீட்டில் எப்படி உத்தம மனைவியாக நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு

எடுத்துக்காட்டாக வி ள ங் கி ன ர் பாத்திமா (ரலி). வறியவரான தம் கணவரின் வருவாய்க்கேற்ப குடும்பம் நடத்தினார். கணவரின் மனப் போக் கறிந்து செயல்பட்டார். மாவு அரைப் பது, வீடு கூட்டுவது, துணி துவைப்பது, கணவரின் சுவைக்கேற்பச் சமைப்பது ஆகிய பணிகளை மகிழ்வோடு செய்து வந்தார். பிற்காலத்தில் பணிப்பெண் உதவி கிடைத்தபோது கூட, வீட்டுப் பணிகளைப் பகுத்துக்கொண்டு முறை யோடு செய்து வந்தார்.

பாத்திமா (ரலி) அவர்கட்கு ஹஸன் (ரலி) ஹாஸைன் (ரலி) ஆகிய இரு ஆண் மக்கள் பிறந்தனர். அண்ணலார் தம் மகள், மருமகன், பேரப்பிள்ளைகள் மீது அளவிலா அன்பைச் சொரிந்தார். (முஹ்ளின் என்று ஒரு குழந்தை பிறந்து சிசுவாக இருக்கும்போது காலாயிற்று).