பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

வாறு நடந்த பிறந்த நாள் விழாக் களும் அரசு அதிகாரிகள் மார்க்கப் பெரியவர்கள் மட்டும் கலந்து கொள் ளும் விழாவாகவே நடைபெற்றன.

பின்னர், பலரும் கலந்து கொள்ளும் வகையில் மீலாத் விழா நடைபெற லாயிற்று. 1910ஆம் ஆண்டு துருக்கி சுல்தான் மூன்றாம் முராதுவின் பெரும் முயற்சியில் மீலாத் விழா மக்கள் அனை வரும் இணைந்து கொண்டாடும் தேசி யத் திருவிழாவாக முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. அதன் பின் இந்தியாவில் மீ லாத் அன்று இரவு பள்ளிவாசல்கள் தோறும் ரபியுல் அவ்வல் முதல் பன்னிரண்டு நாட்கள் மெளலிது ஒதப்பட்டு இனிப்பு வழங்கி மகிழும் பழக்கம் ஏற்படலாயிற்று. இன்று தமிழகம் எங்கும் ரபீயுல் அவ்வல் பன்னிரண்டாம் நாள் இரவும் அதற்கு அடுத்த நாட்களிலும் மீலாது கூட்டங்கள் இரவிலும் பகலிலும் நடை பெறுகின்றன. முஸ்லிம் அறிஞர்களும், பிறசமயப் பெரியோர்களும் உரை நிகழ்த்துகின்றனர். மக்கள் பெருமள வில் கலந்து கொள்கின்றனர்.

முஃமின்: இந்த அரபுச் சொல்லுக்கு 'இறை நம்பிக்கையாளர்' என்பது பொருளாகும். ஈமான்தாரிகளாகிய நம்பிக்கையாளர்களைக் குறிக்கும் இச் சொல் திருமறையிலும் இடம் பெற்றுள் ளது. திருமறையின் 23ஆம் அத்தி யாயம் அல்முஃமினுான் என்றும், 40ஆம்

அத்தியாயம் அல்முஃமின் என்றும் தலைப்புப் பெயருடையவை ஆகும். இறைவனின் 99 திருப்பெயர்களில்

முஃமின் என்பதும் ஒன்றாகும்.

முயீனுத்தீன் சிஷ்தி, காஜா அஜ் மீரில் அடக்கமாகியுள்ள மாபெரும் இறைஞானச் செல்வர் காஜா முயீனுத் தீன் சிஷ்தி ஆவார். இவரது தந்தை

முயீனுத்தின் சிஷ்தி காஜா

ஸையிது கியாஸுத்தீன் அஹ்மது, ஹ-லைன் (ரலி) வம்சா வழியைச் சேர்ந்தவர். தாயார் ஸையிதா மாஹினூர், ஹஸன் (ரலி) வழி வந்த வர். இவர்களின் திருமகனாக ஹிஜ்ரி 530 ரஜப் 14ஆம் நாள் வெள்ளிக் கிழமை அஃப்கானிஸ்தானில் உள்ள nஸ்தான் எனுமிடத்தில் பிறந்தார்.

இவர் ஒன்பது வயது நிறைவடை வதற்கு முன்னரே திருமறை முழுவதை யும் மனனம் செய்து விட்டார். இவரு டைய இளம் வயதிலேயே பெற்றோர் காலமாகி விட்டனர். இவர் தந்தை விட்டுச்சென்ற சிறு தோட்டத்தின் மூலம் வந்த வருவாயைக் கொண்டே தம் இளமை வாழ்வைக் கழித்து வந்தார்.

ஒரு நாள் சூஃபி ஒருவர் இவருக்கு உண்ண ஓர் எள்ளுருண்டையைத் தந் தார். அதனை உண்டபின் இவர் எண்ணத்திலும், செயலிலும் பெரும் மாறுதல் ஏற்பட்டது. தம் சொத்தை விற்று ஏழைகளுக்கு வழங்கினார். பின்னர் பொருள் ஏதுமற்றவராகத் தம் ஆன்மீகப் பயணத்தைத் தொடர்ந் தார்.

ஹிஜ்ரி 560ஆம் ஆண்டில் மாபெரும் சூஃபி ஞானச் செல்வராகத் திகழ்ந்த காஜா உஸ்மான் ஹாருனி அவர்களின் சிஷ்தியா தரீக்காவில் சேர்ந்தார். அவரிடம் முரீது எனும் தீட்சை பெற் றார். அங்கேயே இருபது ஆண்டுகள் தங்கினார். இக்காலகட்டத்தில் இவரது சூஃபித்துவ உணர்வும், இறைஞானச் சிந்தனையும் இவரை மாபெரும் வலி நிலைக்கு உயர்த்தின.

பின்னர் இவர் கஞ்சம் எனுமிடம் சென்று மெய்ஞ்ஞானப் பெரியார் ஷைகு நஜ்முத்தீன் குப்ராவிடம் சில காலம் தங்கி மேலும் பக்குவம் பெற் றார். அதன்பின் அங்கிருந்து பக்தாது