பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 66

மஸ்தான் சுல்தான் அப்துல்

காதிர் ஆவார்.

எனும்

தம் கல்வியை முடித்துக்கொண்ட ஷைகனா தம் தந்தை வழியைப் பின் பற்றி இரத்தின வாணிகத்தில் ஈடுபட் டார். ஆயினும் அவரது சிந்தனையும், கவனமும் இலக்கியத்தின் மீதும், பாடல் இயற்றுவதிலுமே சென்றது. எனவே, இவர் வணிகத்தை விரைவி லேயே விட்டுவிட்டுப் புலமைத் தொடர் பான பணிகளிலேயே முழுமையாக ஈடு படலானார்.

ஆற்றொழுக்குப் போன்று கவிதை புனையவல்ல ஆற்றல் படைத்த இவர் பல்வேறு வகையான இலக்கியங்களைப் படைத்தளித்துள்ளார். பு து கு ஷ் ஷாம் (ஷாம் நகர் வெற்றி), திருமணி மாலை, குத்புநாயகம், திருக்காரணப் புராணம் ஆகிய நான்கும் காப்பியப் படைப்புகளாகும். இதன்மூலம் இஸ்லா மியத் தமிழ்ப் புலவருள் நான்கு காப் பியம் பாடிய ஒரே முஸ்லிம் தமிழ்ப் புலவரென்ற இவரையே மற்றும் சுவர்க்க நீதி, அந்தாதி, கோத்திரமாலை போன்ற நூல்களையும் மற்றும் பல

பெருமை

சாரும. 历厂@、

வண்ணப் பாக்களையும் இயற்றியுள்ளார். பல

'சித்திரக்கவி'களும் யாத்துள்ளார்.

இவர் படைப்புகளில் அளவில் மிகப் பெரியது புதுகுஷ்ஷாம் ஆகும். இது

61 படலங்களையும் 6786 செய்யுட்

களையும் கொண்டதாகும்.

இவர் ஹிஜ்ரி 1268 துல்கஃதா பிறை 27 (கி.பி. 12.9.1852) அன்று சென்னை யில் காலமானார். அவரது விருப்பப் படியே தம் பள்ளித்தோழர் குணங்குடி மஸ்தான் அடக்கவிடத்திற்கு அருகி லேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள் ளெது.

ஷைகு ஸஅதி

ஷைகு ஸஅதி. இவர் மாபெரும் பார்ஸி கவிஞரும் சிறந்த தத்துவ ஞானியும் ஆவார். இவர் 1184இல்

விராளில் பிறந்தார். இவரது இயற் பெயர் முஸ்லிஹாத் தீன் என்பதாகும். 'ஸஅதி' என்பது இவரது புனைபெயரா கும். இவர் பக்தாது நகரில் புகழ்பெற்று விளங்கிய நிஜாமிய்யாக் கல்லூரியில் பயின்றவர். ஷைகு ஷிஹாபுத்தீன்

ஸாஹ்ரவர்தீயிடம் ஆன்மீக மெய்ஞ் ஞானப் பயிற்சி பெற்றவர். இவர்

முதன் முறையாக ஹஜ் பயணத்தை நடந்தே சென்று மு டி த் தார். தொடர்ந்து கால்நடையாகவே பதி னான்குமுறை பயணம் மேற் கொண்டார்.

ഈജ

இவர் மத்திய கிழக்கு நாடுகளில் மட் டும் அல்லாது ஐரோப்பவிலுள்ள மேலை நாடுகளிலும் ஆசியா மைனர், இந்தியா போன்ற கீழைநாடுகளுக்கும் சென்று வந்துள்ளார். இதனால் இவர் பல்வகை அனுபவங்களும் பல்வேறு மொழியறி வும் வாய்க்கப் பெற்றவராக விளங்

90sя тлі.

ஆன்மீகச் சிந்தனைகளின்

பல நூல்களை

எழுதியளித்

இவர் திரட்சியாக ш т гі даў மொழியில் கவிதையாக துள்ளார். அவற்றுள்

கரீமா, போஸ்தான் போன்ற நூல் கள் மிக உயர்ந்த படைப்புகளாகப் போற்றப்படுகின்றன. இந்நூல்கள் ஆங் கிலம், ஃபிரெஞ்சு, ஜெர்மனி, ரஷ்யன் போன்ற ஐரோப்பிய மொழிகளிலும் அரபி, துருக்கி, ஹிந்தி, உருது, தமிழ் போன்ற ஆசிய .ெ மா ழி க ளி லு ம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

'குலிஸ்தான்',

தலைசிறந்த மெய்ஞ்ஞானியாகத் திகழ்ந்த இவர் ஷைகு ஸஅதி' என்றே அழைக்கப்பட்டார். சிலர் மிகுந்த மதிப் புடனும் மரியாதையுடனும் அவரது