உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

அப்பாளியக் கலிஃபா அல் மன்சூர் பெருமானாரின் வழித் தோன்றல்கள் சிலரைக் கொடுமை செய்து அழித்து வந்தார். இதை அபூஹனீஃபா (ரஹ்) கடுமையாக எதிர்த்தார்கள். இவரது எதிர்ப்பைக் கண்டு அஞ்சிய கலீஃபா அல் மன்சூர் இவரை அரவணைத்து அடக்க முற்பட்டார். இதற்காக நாட் டின் மிக உயரிய தலைமை நீதிபதி பதவி தருவதாகக் கூறினார். பக்தாது வந்து பதவி ஏற்குமாறு பணித்தார். ஆனால் இமாம் அவர்கள் நீதிபதி பதவி ஏற்க அடியோடு மறுத்துவிட்டார். இத னால் சினமுற்ற கலீஃபா இவரைச் சிறையில் தள்ளினார். இமாம் அவர் களுக்கு வழங்கப்பட்ட உணவில் நஞ்சு கலந்து கொடுக்கச் செய்தார். இத னால் ஹஜ்ரி 150 ஷஃபான் பிறை 2 அன்று இமாம் அபூஹனீஃபா (ரஹ்) காலமானார். இவரது ஜனாஸாத் தொழுகையில் பல்லாயிரக்கணக்கான இவர்

உடல் பக்தாதில் நல்லடக்கம் செய்யப்

மக்கள் கலந்து கொண்டனர்.

பட்டுள்ளது.

அபூஹுரைரா (ரலி): இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அணுக்கத் தோழர் களி ல் குறிப்பிடத்தக்கவரா இஸ்லாத்தில் இணைவதற்கு முன்னால் இவரது இயற்பெயர் அப்து ஷம்ஸ் (சூரியனின் அடிமை) என்பதா கும். இஸ்லாத்தில் சேர்ந்தபின்னர் இவர் பெயர் 'அப்துல்லாஹ்' என ஆகி யது. இதற்கு அல்லாஹ்வின் அடிமை” என்பது பொருளாகும். தாம் வளர்த்து வந்த பூனைமீது இவர் மிக்க அன்பும் பரிவும் பாசமும் காட்டி வந்ததால் இப் பெயர் ஏற்பட்டது. இப்பெயரே நிலை யாகவும் அமைந்துவிட்டது.

வார்.

இவர் பெருமானாரின் இறுதி நான் காண்டுகள் நிழல்போல் இருந்து வந்

அமானி ஹல்ரத்

தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழங்கிய அறிவுரைகள், அறக் செய்திகள் சம்பவங்கள் அனைத்தை யும் எழுத்திலும் மனத்திலும் பதிவு செய்து வந்தார். நினைவாற்றல் மிக்க வர். பெருமானாரின் மறைவுக்குப் பின் அவற்றை உலகுக்கு வழங்கியவர். இவர் 5374 நபி மொழிகளை உலகுக்கு அறி வித்திருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்

ளது.

இவர் புகழ்பெற்ற சூஃபித்துவ மெய்ஞ் ஞானியும் ஆவார். மிக அதிகமாக இறைவணக்கம் புரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். எளிமைக்கே எடுத் துக்காட்டாக ஒற்றை குடிசையில் வாழ்ந்து வந்த செல்வர்.

உடையுடன் ஞானச்

கைபர் போரின்போது பெருமானார் (ஸல்) அவர்களோடு தொடர்புகொண் அதற்குப்பின் நடைபெற்ற போர்கள் அனைத்திலும் பங்குகொண்

f_fT广”。

LLтті.

உமர் (ரலி) கலீஃபாவாக இருந்த போது இவர் பஹ்ரைனின் ஆளுநராகச் சிலகாலம் பணியாற்றினார்.

பின்னர், முஆவியா (ரலி) அ வ ர் களின் கிலாஃபத்துச் சமயத்தில் சில நாட்கள் மதீனாவின் ஆளுநராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவர் தமது 78வது வயதில் மதீனா வில் காலமானார். நபித்தோழர்களின் நல்லடக்கத்தலமான ஜன்னத்துல் பகீ யில் அடக்கம் செய்யப்பட்டார்.

மில்லத்):

மார்க்க

அமானி ஹல்ரத் (ஷைகுல் தமிழகத்தின் இஸ்லாமிய ஞானச் செல்வர்களில் குறிப்பிடத்தக்க வர் அமானி ஹல்ரத் அவர்கள். இவர் பள்ளிகொண்டா எனும் ஊரில் 1893ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 23ஆம்