பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

வத்தை உணரா பனு இஸ்ராயில்கள் இவரை இறை தூதராக ஏற்றுக் கொள் ளாததோடு, இவரை சூனியக்காரர், மந்திரவாதி என்றெல்லாம் தூற்றினர், என்றாலும் தொடர்ந்து ஈஸா (அலை) உருவமற்ற ஒரே இறைவனையே வணங்க வேண்டுமென்று மக்களிடையே உபதேசம் செய்து வந்தார்.

பனு இஸ்ராயில்களுக்குத் தாம் இறைதூதர் என்பதை வலுவாக உணர்த்தும் பொருட்டு இறந்தவர் களை உயிர்ப்பித்துக் காட்டினார். இதையெல்லாம் நேரடியாகக் கண்டும் கூட இவரை தீர்க்கதரிசியாக ஏற்க மறுத்துவிட்டனர்.

இவரது தூதுத்வத்தை நம்பி, இவரை இறை தூதராகப் பன்னிரண்டு யேர் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் இவ ருடைய நெருங்கிய சீடர்களாயினர். ஈஸா (அலை) அவர்களின் உபதேசங் களை ஏற்று அதன்படி வாழ்வாராயி னர். இச்சீடர்களோடு பல்வேறு இடங் களுக்கும் சென்று, மக்களுக்கு இறை நெறியை உபதேசிக்கலானார். ஒரு சம யம் இவர்களின் இறை வேட்டலை ஏற் றுக்கொண்ட இறைவன், உணவுத் தட்டு களை விண்ணிலிருந்து அனுப்பினான். ஈஸா (அலை) அவர்கள் தம்மை நோக்கி வந்த ஏழை எளியோர்க்கெல்லாம் அத் தட்டிலிருந்து உணவு கொடுத்தார். அள்ள அள்ளக் குறையாமல் அத்தட் டில் உணவு வளர்ந்து கொண்டே இருந் தது. இவ்வாறு ஆயிரத்து முன்னு று பேர் உணவு உண்டு மகிழ்ந்தனர். உணவு உட்கொண்டவர்களின் நோய் நொடிகள் எல்லாம் அகன்றன. இந்த அற்புதத்தைக் கண்டுங்கூட பனு இஸ் ராயீல்கள் இவரை இறைதூதராக ஏற் றுக்கொள்ள முன் வரவில்லை.

எனினும் ஈஸா (அலை) அவர்கள் சிறிதும் மனம் தளராது ஒரே இறை

உதுமான் (ரலி)

வனை வணங்கி உய்வடையுமாறு மக் களிடையே தொடர்ந்து முனைப்போடு உபதேசித்தார். இதைக் காணப் பொறுக்காத பனு இஸ்ராயில்கள் இவ ரைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டி

&:ৈ ,

இறைவன் கட்டளைக்கிணங்க ஈஸா (அலை) தம் சீடர்களைப் பல்வேறு இ டங்க ளு க் கு ப் பிரிந்து சென்று தொடர்ந்து பிரச்சாரம் செய்யுமாறு பணித்தார். அவர்களும் அவ்வாறே செய்யலாயினர்.

யூதாஸ் என்பவன் முப்பது வெள்ளிக் காசுகளுக்காக ஈஸா (அலை) அவர் களைக் காட்டிக் கொடுத்தான். எதிரி களாகிய பனு இஸ்ராயில்கள் இவரைப் பிடித்து, இவரது தலையில் முட்கிரீ டத்தை வைத்து வதைத்தனர். இறை வன் தன் கருணையினால் யூதாஸாக்கு ஈஸா (அலை) அவர்களின் உருவை அளித்தான். ஈஸா (அலை) அவர்களை விண்ணிற்கு அழைத்துக் கொண்டான். ஈஸா வடிவிலிருந்த யூதாஸ் தான் ஈஸா அல்ல என எவ்வளவோ கூறி மன்றாடி யும் எதிரிகள் கேட்கவில்லை. ஈஸா (அலை) உருவில் இருந்த யூதாஸை இவ் வாறு சிலுவையில் அறைந்து கொன்ற னர். இந்நிகழ்ச்சி ரமளான் இரவொன் றில் நடைபெற்றது. அப்போது ஈஸா (அலை) அவர்கட்கு வயது முப்பத்து மூன்று ஆகும்.

இறுதி நாளின்போது ஈஸா (அலை) மீண்டும் வருவார் என அண்ணல் நபி கள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள் 6fy TT [Ꭲö ☾

உதுமான் (ரலி): இஸ்லாத்தின் மூன் றாம் கலிபாவாக விளங்கியவர் உது மான் (ரலி) ஆவார். இவர் குறைஷி குலத்தைச் சேர்ந்த உமையாக் கிளை யினர். இவர் தந்தையார் பெயர்