பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

யோடு கூடிய இதன் உயரம் 187 மீட்டர் ஆகும். இதன் உச்சியில்

இருந்தபடி 25 கி.மீ. சுற்றளவு உள்ள பகுதிகளைக் கண்டு களிக்கலாம்.

இதுவே ஆசியாவின் மிக உயரக் கோபுரம் ஆகும்.

கெளதுல் அஃலம்: மெய்ஞ்ஞான

மேதை அப்துல் காதர் முஹிய்யுத்தின் ஆண்டகையைக் குறிக்கும் சிறப்புப் பெயராகும். ஒவ்வொரு கால கட்டத் திலும் அண்ணல் முஹம்மது (ஸல்) அவர்களின் பிரதிநிதிகளாக முப்பது வலிமார்கள் தோன்றுவார்கள் என்பது ஹதீது செய்தி. அவ் வலிமார்களின் தலைவர் கெளதுல் அஃலம்' என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவர் என்பது நியதி. அம்முறையிலேயே முஹிய்யுத்தின் ஆண்டகை கெளதுல் அஃலம்' என அழைக்கப்படலாயினர். எனவே, இப்பட்டம் இறைவனால் வழங்கப்பட்ட சிறப்பு எனக் கருதப் படுகிறது.

சதக்கத்துல்லா அப்பா: தமிழகத் தில் தோன்றிய மாபெரும் இஸ்லாமிய மார்க்க ஞான மேதை சதக்கத்துல்லா அப்பா அவர்களாவார். இவர் ஹிஜ்ரி 1042ஆம் ஆண்டில் காயல்பட்டினத் தில் பிறந்தவர். இவர் தந்தையார் பெயர் சுலைமான் (வலி). தாயார் பெயர் பாத்திமா. தாயாரின் பூர்வீகம் பிராமண குலமாகும். சதக்கத்துல்லா அப்பா அவர்களின் உடன் பிறந்த சகோதரர்கள் நால்வர் ஆவர். அவர் கள் அனைவரும் மார்க்கஞானம் நிரம்பப் பெற்றவர்கள். சதக்கத் துல்லா அப்பா அவர்களின் இயற் பெயர் சதக்கா என்பதாகும். இவர் முன்னோர்கள் அபூபக்ர் (ரலி)அவர் களின் வழிவந்தோராவர்.

இளம் வயதில் தம் தந்தையிடமே மார்க்கக் கல்வி பெற்றார். அதன்

சதக்கத்துல்லா அப்பா

பின்னர் அதிராம்பட்டினம் சென்று மேலும் மார்க்கக் கல்வி கற்கலானார். அவர் ஆசிரியர் சின்ன நெய்னா லெப்பை ஆலிம் ஆவார்.

அதிராம்பட்டினத்தில் கல்வி யை முடித்துக் கொண்டபின் இஸ்லாமிய மார்க்க ஞான நூல்கள் அனைத்தையும் கற்பதிலும் அவற்றைப்பற்றி ஆழச் சிந்திப்பதிலும் செலவிட்டார். இவர் அ வ் வ ப் போது வெளிப்படுத்தும் மார்க்க ஞான உபதேசங்கள் மக்களை யும் ஆலிம்களையும் பெரிதும் ஈர்த்தன. பரவசப்படுத்தி வியக்கவைத்தன. ஒரு சமயம் இவர் ஹஜ் சென்றிருந்தபோது இவரது மார்க்க அறிவைப் பாராட்டி இவரை சதக்கத்துல்லாஹ் (அல்லாஹ் வின் அருட்கொடை) என அழைக்க, அப்பெயரே நிலை பெறலாயிற்று.

இவரது இஸ்லாமிய ஞானத்தைக் கேள்விப்பட்ட சக்கரவர்த்தி ஒளரங்க சீப் ஆலம்கீர் இவருக்குப் பதவியும், பரிசுகளும் தர முன்வந்தார். இவர் எதையுமே விரும்பாதவராக வாழ்ந் தார். எனினும் உலமாக்கள் இவருக் குப் பல்வேறு உயர் பட்டங்களை வழங்

கினர்.

இணையற்ற இறைநேசரான சதக் கத்துல்லா அப்பா அவர்கள் ஆயிரத் துக்கு மேற்பட்டவர்கட்கு மார்க்கக் கல்வி போதித்தார். அவர்களுள் இவர் இளவல் ஷாம் ஷிஹாபுத்தீன் வலியுல் லாவும் ஒருவராவார். ஆயிரக்கணக் கானோர் அப்பா அவர்களை மான சீகக் குருவாகக்கொண்டு மார்க்க ஞானம் பெருக்கி வந்தனர்.

உமறுப்புலவர் அவர்கள் சீறாப் புராணம் எழுத எண்ணியபோது, அவரது வெளித்தோற்றத்தைக் கண்டு பெருமானார் வாழ்க்கையை அவருக்கு விளக்கிக் கூற விரும்பவில்லை. எனவே,