பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 இளைஞர் தொலைக்காட்சி கோஆக்ஸியல் கேபிள் (Coaxial cable): தொலைக்காட்சிக் காமிராவிலிருந்து வெளிப்படும் மின்சாரச் சைகைச் செய்தி களை அலைகள் வடிவில் அனுப்பும் இருவியினின்றும் ஆண் டென்ன எனப்படும் வான் கம்பிக்கு இக்கம்பி கொண்டு செல்லுகின்றது. - $ : z, கோல்கள் (Rods): இவையும் கண்திரையிலுள்ள மற்ருெரு வகை உயிரணுக்களே. இவை நூல் நூற்கும் கதிர் கள் போன்றவை. சிறு கோல்கள்போல் நீண்டிருத்தலின் இவை இப்பெயரைப் பெற்றன. இவை பிம்பத்திற்கு ஒளிர் வைத் தருபவை. - சட்டம் (Frame) : தொலைக்காட்சிக் காமிராவினின்றும் உண்டாகும் முற்றுப்பெற்ற படம் இப்பெயரால் வழங்கப் பெறுகின்றது. . . . . . . . . . . சுத்தி எலும்பு (Hamer): இது நடுச்செவியிலுள்ள சிற்றெலும்புகளில் ஒன்ருகும்; தன் வடிவில்ை இப்பெயரைப் பெற்றது. - - - சுருங்கிச் செறிதல் (Condensation): ஒரிடத்திலுள்ள காற்று குளிர்ந்து சுருங்கி அதிகத் திண்மையுள்ள காற்ருக மாறித் தெவிட்டு நிலையை அடைதல். செவிப்புறை (Ear drum): புறச் செவியின் உட்புறம் நடுச் செவியின் அருகிலுள்ள ஒரு வகைச் சவ்வு. இதில் தாக் கும் காற்றலைகள் அதிர்ச்சிகளை உண்டாக்குகின்றன.

  1. 5 offiliff finir (Power of accommodation): கண்ணின் விழித்திரை ஒளியின் உறைப்பிற்கேற்றவாறு சுருங்கி விரியும் தன்மையாகும் இது. • ,

துருவிப் பார்த்தல் (Scanning): மின்னணுத் துப்பாக்கி . யினின்றும் வெளிப்படும் மின்னணுக் கற்றை கண்ணுடித்