பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி மின்சாரமாதல் - 37 அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையுள்ள மின்ன அணுக்கள் ஒரு பெரிய துளியில் இருக்கின்றன. இதனேக்கொண்டு மின்னணுவின் நுண்மையை எண்ணிப் பாருங்கள். எல்லா அணுக்களிலும் மின்னணுக்கள் உள்ளன. எல்லாப் பொருள்களும் அணுக்களா லானவை; எல்லா இடமும் அணுக்கள் நிறைக் துள்ளன. நீங்களும் நானும் மின்னணுக்களா லானவர்களே, நம்மிடம் கோடானு கோடி மின் னணுக்கள் உள்ளன. அங்ங்னமே உலகிலுள்ள பொருள்கள், பிராணிகள், காற்று, நீர் முதலிய அனேத்திலும் கண்ணுக்குப் புலனாகா, எதிர்மின் லூட்டங் கொண்ட, நுண்ணிய மின்னணுக்கள் நிறைந்துள்ளன. அ. தி க ம் கூறுவானேன்? ஓரிடத்திலிருந்து மற்ருேளிடத்திற்குப் பாய்ந்து செல்லும் மின்னணுக்களே மின்னேட்டமாகும். ஓரிடத்திலிருந்து மற்ருேர் இடத்திற்குப் பாய்ந்து செல்லும் நீர்தானே நீரோட்டம் என்பது? அங்ங்னமே, பாய்ந்து செல்லும் மின்னணுக்களே மின்னேட்டமாகும். நீரோட்டம் பாய்ந்து செல் லும் வேகத்திற்கேற்ப அதன் வன்மையும் மிகும் என்பதை நாம் அறிவோம். மின்னேட்டத்திலும் இதே கிலேதான் , மின்னனுக்கள் பாய்ந்து செல் லும் வேகத்திற்கேற்ப மின்னேட்டத்தின் வன்மை யும் அதிகரிக்கின்றது. -