உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. தொலைக்காட்சிக் காமிரா. தொலைக்காட்சி நிலையத்தில் நிகழ்ச்சிகளைப் படமாக்கி ஒளி பரப்புகின்றனர். இங்குத் தொலைக் di fă ditätt (Television camera) 6 pabih படங்கள் எடுக்கப்பெறுகின்றன. இக்காமிரா தான் நிலையத்தின் இதயம் போன்றது. ஒரு தொலைக்காட்சி நிலையத்தில் ஒரு சில ஆயிரம் வெற்றிடக் குழல்கள் பல்வேறு முறையில் செயற். படுகின்றன. - - . தொலைக்காட்சிக் காமிரா பிரத்தியேகமான அமைப்புடையது. இதில் பயன்படும் முக்கிய குழல்களுள் ஒன்று ஐகனுஸ்கோப்பு (IconoScope) என்னும் படக்குழலாகும். ஐகான் (icon) என்பதற்குப் படம் அல்லது உருவம் என்பது பொருளாகும்; ஸ்கோப்' (scope) என்பதற்குக் குழல் என்பது பொருள். ஐகனஸ்கோப்பை நாம் உருவங் காட்டி என்று வழங்கலாம். இக்குழலேத் தவிர காமிராவில் சுமார் முப்பது வெற்றிடக் குழல்கள் இருக்கின்றன. ஆயினும், ஐகனஸ்கோப் என்ற குழல் ஒரு தொழில் முதல்வனைப்போல் (Foreman) இயங்குகின்றது. ஏனைய குழல்கள் பல்வேறு முறைகளில் செயற்படுகின்றன. முதன்முதலில் உண்டாகும் பார்வை அடை யாளங்கள் (Video signals) மிகவும் வலுவற்றிருப்