உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

மகரந்தச் சேர்க்கை

டும். முறைப்படி மருத்துவம் செய்துகொள்ள வேண்டும். தவறினால் பெரும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும். சாதாரணமாக போலியோ நோய் கண்ட குழந்தைகளின் எலும்புகள் வளைந்துவிடும். இன்று கண்டறியப்பட்டுள்ள நவீன சாதனங்களைக் கொண்டு. போலியோ நோய் பீடித்த குழந்தைகள் எவ்வித ஊனமுமின்றி குணமடைய முடிகிறது. அப்படியே பாதிப்புக்கு ஆளாகி ஊனமடைந்துவிட்ட சிறப்பு உடற் பயிற்சி மூலமும், மருந்துகள் மூலமும் குணமடைந்துவிட முடிகிறது.

இத்ற்காக தசைகளையும் நரம்புகளையும் சீராக்க மின் கருவிகளும் இன்று பயன்படுத்தப் பட்டு வருகிறது.

போலியோ நோய்க் கிருமிகள் நோயாளியின் மூலம், சளி ஆகியவை மூலம் எளிதாகப் பரவி மற்றவரைத் தொற்றுகிறது. நோய்த்தடுப்பு முறைதளை முழுமையாகக் கைக்கொள்வதன் மூலம் இந்நோய் மற்றவருக்கும் பரவாமல் தடுக்க முடியும்.

போலியோ நோயை முற்றாக ஒழித்துக் கட்ட எல்லா முனைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டாக்டர் ஜோன்ஸ் சால் என்பார் போலியோ தடுப்பு ஊசி மருந்தைக் கண்டுபிடித்துள்ளார். இதைக் கொண்டு இலட்சக்கணக்கானோர் போலியோ தொற்று நோயிலிருந்து தங்களைக் காத்துக் கொண்டுள்ளனர். சாதாரணமாக அம்மை குத்திக்கொள்வது போன்று போலியோ தடுப்பு ஊசிமருந்தை குழந்தைக்குப் போட்டுவிட்டால் போலியோ நோய்த் தொல்லை அணுகாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இன்று குழந்தைகளுக்கு வாய் மூலம் தரப்படும் சொட்டு மருந்து பெருமளவில் பயன் படுத்தப்பட்டு வருகிறது. பிறந்த மழலை குழந்தைக்கு குறிப்பிட்ட கால இடை வெளிகளில் சொட்டு மருந்து தந்து வந்தால் இந்நோய்ப் பாதிப்பு அறவே இல்லாதொழியும்.


மகரந்தம் : தாவரங்கள் இனப் பெருக்கம் செய்துகொள்ள அடிப்படையாக அமைவன மகரந்தத் துகள்களாகும். மகரந்தத் துகளினுள் ஆண் அணுஉட்கரு அமைந்துள்ளது. மகரந்தத் துகள்கள் சாதாரணமாகப் பார்ப்பதற்கு மஞ்சள் நிற வண்ணமுடையனவாகத் தோற்றமளிக்கும். இவை நுண்ணிய பொடி வடிவில் அமைந்துள்ளன.

மகரந்தத் துகள் பொடிகள் தாவரத்தில் பூவில் அமைந்துள்ள மகரந்தப் பையில் உருவாகின்றன. நீண்ட இப் பையில் எண்ணற்ற மகரந்தத் துகள்கள் உண்டாகின்றன. சாதாரணமாக மகரந்தத் துகள்கள் உருண்டை வடிவினவாக அமைந்திருக்கும். மகரந்தப்பை நன்கு வளர்ச்சி பெற்று முற்றி வெடிக்கும். அப்போது பையிலுள்ள மகரந்தப் பொடிகள் வெளிப்பட்டு பையின் மேல் விளிம்புகளில் தங்கியும் தொங்கிக் கொண்டுமிருக்கும். அப்போது அவற்றின் மீது விசையோடு மோதிச் செல்லும் காற்று மூலமும் பூவிலுள்ள தேனை உறிஞ்ச வரும் வண்ணத்துப் பூச்சு போன்ற வைகளின் கால்களில் ஒட்டிக் கொள்வதன் மூலமும் பிற பூக்களில் உள்ள இனப் பெருக்கச் சூலகத்தை அடைகின்றன. இதுவே மகரந்தச் சேர்க்கை என அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு மகரந்தத் துகளிலும் உள்ளுறை, வெளியுறை என இரு வகையான உறைகள் அமைந்துள்ளன. இப்பொருள் கெட்டித்தன்மையும் மெழுகுத்தன்மையும் கொண்டதாக அமைந்திருப்பதால் மகரந்தத் துகள் தவறி நீரில் விழுந்து விட்டால் கூட அதன் உயிர்ப்புத் தன்மை பாதிப்பதில்லை.


மகரந்தச் சேர்க்கை : 'பாலினேஷன்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மகரந்தச் சேர்க்கை மூலமே தாவரங்கள் இனவிருத்தி

அயல் மகரந்தச் சேர்க்கை

செய்கின்றன. மகரந்தம் என்பது உருண்டை