பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

வணங்கப் பணித்தாரோ, அந்த நபியின் மீது கொண்ட அளவிலா மதிப்பினாலும் மரியாதையினாலும் அந்த நபியையே இறைத் தூதராக வணங்கத் தலைப்படுவர். நபி மூலம் வந்த இறை வேதத்திலும் தங்கள் விருப்பு, வெறுப்புகளை ஏற்றி அதன் மூலக் கொள்கையை மாசுபடுத்தி விடுவர்.

எனவே, மீண்டும் ஓரிறைக் கொள்கையை நிலைநாட்ட ஒரு புது நபியை இறை தூதராகவும் அவர் மூலம் மீண்டும் மூல வடிவில் வேதமும் இறைவனால் அருளப்பட்டன. இவ்வாறு உலகெங்கும் ஒரு இலட்சத்து இருபத்தி நான்காயிரம் நபிமார்களும் முப்பத்தியாறு முறை இறை வேதங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டன. அவர்களுள் இறைத் தூதர் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் இறுதி இறைத் தூதராகவும் திருக்குர்ஆனை இறுதி வேதமாகவும் இறைவன் அருளினான்.

இறுதி வேதக் காப்பு இறைவனுடையது

நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களைக் காக்கும் பொறுப்பை இறைவன் மனிதர்களுக்கு வழங்கினான். ஆனால், இறுதி வேதத்தைக் காக்கும் முழுப் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொண்டு விட்டதால் மனிதர்களால் இறை வேதத்தில் ஒரு புள்ளியையும் மாற்ற இயலாமற் போய்விட்டது. ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் திருத்தமேதும் இல்லா (நீக்கமோ சேர்க்கையோ இல்லாது உள்ளது உள்ளபடி) திருமறையாகவே, மூல வடிவிலேயே விளங்கி மக்களுக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்கி வருகிறது.

பெருமானார் (சல்) அவர்கட்கு வழங்கப்பட்ட இறைச்செய்தி முன்னர் வந்த நபிமார்கட்கு வழங்கப்பட்ட செய்திகளின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது என்பதை,