உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈச்சம்பாய்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

101


நிற்கிற சாதி... இவனுக பிச்சைக்காரன் மாதிரி கெஞ்சுறான். சட்டுபுட்டுன்னு முடிச்சுடணும்.”

அரிவாளை ஓங்கி ஒருவருக்கு குறிபாத்த சண்டியனின் கையை வேல்கம்பர் பிடித்துக்கொண்டு கெஞ்சாமலும், மிஞ்சாமலும் பேசினார்:

“பொறுப்பா- நான் இவனுக எந்த சாதின்னு கண்டுபிடிச்சு சொல்றேன். பெல்ட்டுன்னு பாத்தா, அதோ அந்த கிழவர் பெரிசா போட்டிருக்கார். உயரமுன்னு பாத்தா அதோ ஒரு ஒட்டடைக்கம்பன். உயிருன்னு வந்துட்டா... அதுவும் நிதானமான கொலைன்னு வந்துட்டா, ஒருத்தன் எந்த சாதியா இருந்தாலும், கதறுவான்: காலைத் தொட்டு கும்புடுவான். ஒரு அஞ்சே அஞ்சு நிமிஷம் பொறு.”

“போலீஸ்காரங்க வந்து நம்மள விலங்கு போட்டு இழுத்துட்டு போகணுங்கிறியா?”

சண்டியருக்கு, ஒரு குயுக்தி. அந்த சாதிப் பயகள வெட்டுற சாக்குல, இந்த சொந்த சாதிப் பயலையும் வெட்டிக் கொல்லணும்; இல்லாட்டா பிழைக்க விடமாட்டான். ஒவ்வொரு தலைக்கும் ஐயாயிரம் ரூபாய் தலைவர் தந்திருக்கார். இந்தக் கொலை செய்தி பேப்பர்ல பாத்ததும் இன்னும் ஐயாயிரம் தருவார். இப்போ எந்த சாதியை வெட்டணும் என்கிறது முக்கியமல்ல... எத்தனை பேரை வெட்டணும் என்கிறதுதான் முக்கியம்.

‘ஏலே! நீங்க ஆம்புளைங்களா.. இல்ல பொம்பளைங்களா...

“பொறுண்ணே ... மனுசங்களா விசாரிப்போம். அப்புறம் இருக்கவே இருக்கு, அரிவாள். ஏமுல... நீங்க எந்த சாதிடா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/107&oldid=1534480" இலிருந்து மீள்விக்கப்பட்டது