பக்கம்:ஈச்சம்பாய்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈச்சம்பாய்

காட்டிற்குக் காடாகவும், மலைக்கு மலையாகவும் தோன்றிய காட்டு மலை அல்லது மலைக்காடு, கர்நாடக மாநிலத்தில் மலெநாடு என்று அழைக்கப்படும் வளம் கொழிக்கும் தபோவனம் போன்ற நிசப்தப் பகுதி. நாட்டியப் பெண்கள்போல், பாக்கு மரங்களும், நட்டுவாங்கனார்போல் தென்னை மரங்களும் இடைவெளி கொடுக்காமல் இணைந்து நிற்க முக்காடு போட்ட பெண்கள்போல், தென்னை ஓலைகளால் மூடப்பட்ட தென்னங்கன்றுகள், தாவர மான்போல் தாளலயத்தோடு நிற்க, இயற்கைச் சிற்பி, தன் மேலான படைப்பாற்றலில் பூரித்துப் போனது போன்ற விதவிதமான மரங்களாலும் செடிகளாலும் வியாபிக்கப்பட்ட ஊர் -

நாற்பது நாற்பத்தைந்து கல் கட்டிட வீடுகள் - ப வடிவத்தில் அமைக்கப்பட்டு, ஒரே தொடர்ச்சியாக வியாபித்திருந்த ‘மேளா’ கட்டு. கட்டிட முற்றத்தின் மையத்தில், மிகப் பெரிய அடுப்பு அதன்மேல் ஒரு குண்டாப்பானை சவாரி செய்து கொண்டிருந்தது. மல்லிகார்ஜுன கவாமிக்கு விழா நெருங்குவதால், இங்குள்ள ‘குருவி’ ஜாதி மலை மக்கள் கூட்டாஞ்சோறுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆண், பெண், குழந்தைகள் அத்தனை பேரும் விழா மயக்கத்தில் இருப்பதுபோல், புதுத்துணி வாங்குவது பற்றியும், கூட்டாக முயல் வேட்டைக்குப் போவது பற்றியும் பேசிக் கொண்டிருந்த காலை நேரத்தில் -

அந்த மேளாக் கட்டில், தென் மேற்கு மூலை வீட்டில் இருந்த பெல்லிபாய்க்கு, ஒரு கவலை. நேற்று மாலையில் இருந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/112&oldid=1371639" இலிருந்து மீள்விக்கப்பட்டது