பக்கம்:ஈச்சம்பாய்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

ஈச்சம்பாய்



'நிறுத்துங்க மாமா! உங்களால முடியுமா- முடியாதா'...

'முடியாது என்கிறத இதுக்குமேல எப்படி மாப்பிள்ளை சொல்றது?'

'எப்படியும் சொல்லுங்க. ஆனா மாப்பிள்ளன்னு மட்டும் சொல்லாதீங்க'.

பழனிச்சாமி, லேசாய் ஆடித்தான் போனார். சிறிது தொலைவில் நின்ற மனைவியையும், அவளை முண்டியடித்து முன்னால் வந்து நின்ற மகளையும் பார்த்தார். தாய்க்காரி கையெடுத்துக் கும்பிடுகிறாள். மகள்காரியோ தாயின் கும்பிட்டக் கைகளை, தனது கைக்குள் இழுத்துப் பிடித்து மறைக்கிறாள். வலது கரத்தை கீழே கொண்டுபோய் துடுப்பு விடுவதுபோல் அதை மேல்நோக்கி கொண்டுபோகிறாள். 'அவங்க கிடக்காங்க... விட்டுத்தள்ளுங்க...'

பழனிச்சாமி, மகளை தாயாகப் பார்க்கிறார். ஆசிரியையாய் அனுமானிக்கிறார். அவருள் பழைய கல்லூரி மாணவன் கிளர்ந்தெழுகிறான். போராளித் துறவி சூளுரைக்கிறான். எதை இழந்தாலும் மனிதத் தன்மையை இழக்க விரும்பாத மாவீரனாய் ஆவேசிக்கிறான். வெற்றி பெறுவது மட்டுமல்ல சாதனை. வெற்றி பெறாமல் இருப்பதும் ஒரு சாதனைதான் என்று பெருமிதப் படுகிறான். அந்தப் பெருமிதம் மகளைப் பார்க்கப் பார்க்கக் கூடுகிறது.

பழனிச்சாமி, அவர்களைப் போகலாம் என்பதுபோல் பார்க்கிறார். உடனே அதுவரை பேசாத மூன்றாவது மனிதர், 'இது தேறாத கேஸுன்னு அப்பவேச் சொன்னேன். கேட்டீங்களா? வாங்கப்பா. நம்ம சாதியில ஐஏஎஸ் அதிகாரிங்க குறைவா... என்ன - கிறுக்கன்கிட்டல்லாம் வரப்படாதுப்பா', என்று சொன்னபடியே, அவர்களின் முதுகுகளைத் தள்ளுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/166&oldid=1371746" இலிருந்து மீள்விக்கப்பட்டது