உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈச்சம்பாய்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

63



கேட்டிருக்கணும்... சொல்கிற வேலை எல்லாவற்றையும் செய்கிறவள்... மல்லிகாவ மாதிரி காட்டேரி இல்ல.

மீனா புறப்படுவது வரைக்கும் காத்திருந்த அக்கவுண்டண்ட் மீரா, அவளோடு அலுவலகத்திலிருந்து வெளிப்பட்டாள். பிராயச்சித்தமாக, அவள் தோளில் கை போட்டபடியே, "சாரிம்மா... இந்த மல்லிகாவுக்கு உறைக்கட்டு முன்னு... உன்கிட்ட பேசிட்டேன்." என்றாள். மீனா, அதைப் பொருட்படுத்தாமலே பேசினாள்:

“அவரு, காலையில் ஏழு மணிக்கு புறப்பட்டு, அபீஸ்ல இருந்து, அப்படியே ஈவினிங் காலேஜ் போயிட்டு, நைட் திரும்பறதுக்கு பதினோரு மணியாயிடுது மேடம்..."

"அதனாலதான் இன்னும் முழுகிக் கிட்டே இருக்கியா?"

'போங்க மேடம்.... வீட்ல ஒரே போர்னு சொல்ல வந்தேன். அதனால 'ஒரு "டிவி' வாங்கலாமுன்னு நினைத்தேன். தவணை முறையில் வாங்கலாமா மேடம்....'

'தாராளமாய்... எனக்கு தெரிந்த பேங்குக்கு கூட்டிட்டு போறேன். கன்சூமர் லோன் விண்ணப்பத்துல உன் மாதச் சம்பளத்துல பிடித்து தவணைப் பணத்தை அனுப்புறதாய், நம்ம நிர்வாக அதிகாரி எழுதிட்டால் போதும். இருபதாயிரம் ரூபாய் வரை கடன் வாங்கலாம். அப்புறம் என்ன? ஒரு வாரத்துல 'டிவியோட, டேப் ரிக்கார்டரும், டூ-இன்-ஒண்ணும் வாங்கலாம்.

பத்தரைக்கு மேல், 'ஒலியும் ஒளியும், இருக்குதா மேடம்?'

'ஏன் கேக்குறே? மூடு தேவைப்படுதா!' அவருக்குத் தேவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/65&oldid=1371962" இலிருந்து மீள்விக்கப்பட்டது