உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈச்சம்பாய்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

91



எங்கிருந்தோ வந்த இந்தப் பாக்கியமுத்து அவன்மேல் பாய்ந்து பம்பரமாய்ச் கழற்றி காலில் விழவைத்தான். இன்னும் ஒரு வாரத்திலே ஒனக்கு இருக்குடா ஆப்புன்னு கத்திக்கிட்டே ஓடின பச்சைக்குத்தியை வெறுங்கையோடு துரத்தியவன் இந்த பாக்கியமுத்து, பத்து வருஷமா ராமனுக்கு அனுமார் மாதிரி பயபக்தியோட பணிவிடை செய்கிறவன். உண்மையத்தவிர எதையுமே பேசாதவன். அவனப் போய் பிடிச்சுட்டுப் போனால், இனிமேல் நாட்டிலே போலீகக்காரன் எவன வேணும்னாலும் பிடிக்கலாம்.. ரெண்டுல ஒண்ணப் பார்த்தாகணும். ஆனாலும் லோக்கல் போலீக.. அதிகமாப் பகைக்கப்படாது. அளவுக்கு மேலே போனா இருக்கவே இருக்கார் டெபுடி கமிஷனர்...

அந்தக்காவல் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்ட செங்கல் லாரிகள், பயணிகளோடு கூடிய வேன்கள், டெம்போக்கள், ஆட்டோக்கள், டயர்போய் மண்ணோடு மண்ணாய் மக்கிப்போன கார்கள், கசமுசா என்று கம்பிகள் மூலம் பேசும் ஒரு கம்பீரமான மோட்டார் பைக் ஆகியவற்றிற்கு இடையே காரை எப்படியோ நுழைத்துவிட்டு அதிலிருந்து வெளிப்பட்ட சுந்தரத்தின் பாதங்களில் இரண்டு கரங்கள் பதிந்தன. கண்ணீர் அவற்றை நனைத்தது. வாய் ஒப்பாரியாய், விம்மலாய், விக்கலாய், தலையடியாய், முகமடியாய், ஒப்பித்தது.

'அய்யா... என் புருசனக் கொல்லாமக் கொல்றானுங்க ஐயா.... சோறு கொண்டுபோன என்னை வெண்டை வெண்டையாப் பேசி துரத்திட்டாங்க சாமி. அப்படியும் நானும் என்னோட பிள்ளிங்களும் இங்கதான்யா பழிகிடக்கோம்... ராத்திரி அவர் போட்ட கூச்சல காது கொடுத்துக் கேட்க முடியாதய்யா- என் ஆம்புடயான கண்ணால பார்ப்பேனாய்யா...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/93&oldid=1371835" இலிருந்து மீள்விக்கப்பட்டது