பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

113


நடுகல்லில் இறந்த வீரன் வைணவபதம் அடைவதாகக் 'கருடன்' அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது.

பவானி வட்டம் ஊராட்சிக் கோட்டைமலை, ஈரோடு வட்டம் மங்கலகிரி பெருமாள் மலை, முருங்கத் தொழுவு கிராமம் அணியரங்க மலை ஆகியவற்றில் மலைமேல் வைணவக்கோயில் உள்ளது.

இ) சமணம்

ஈரோடு மாவட்டத்திற்குச் சமண சமயம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வந்தது. சமண சமயத்தலைவர் பத்திரபாகு முனிவர் (கி.மு.327-297), மௌரியப் பேரரசன் சந்திரகுப்தர் (கி.மு. 322-298) காலத்தில் கன்னட நாட்டு சிரவணபெளகொளா வழியாக ஈரோடு மாவட்டத்திற்குச் சமணம் பரவியது.

பத்திரபாகு முனிவர் தமக்கு இறுதிக்காலம் வருவதை உணர்ந்து சிரவணபெளகொளாவில் சல்லேகனை விரதமிருந்து உயிர் விடத் தீர்மானம் செய்தார். அவருக்குப் பணிவிடை செய்ய சீடன் சந்திரகுப்தனும் அங்கேயே தங்கி விட்டான். விசாகாச்சாரியார் தலைமையில் எண்ணாயிரம் சமணர்கள் தமிழ்நாடு வந்தனர். அவர்கள் முதலில் வருகை புரிந்த பகுதி ஈரோடு மாவட்டம்.

ஈரோடு மாவட்டப்பகுதிக்கு வந்த சமணர்கள் இங்குள்ள மலைகளில் தங்கினர். ஈரோடு மாவட்டத்தில் அரசண்ணாமலை, அறச்சலூர் மலை, ஈரெட்டி மலை போன்ற சில மலைகளில் சமணர் தொடர்பு காணப்படுகிறது.

பெருந்துறை வட்டத்தில் விசயமங்கலத்திற்குத் தெற்கே 4 கி.மீ தொலைவில் அரசண்ணாமலை உள்ளது. மலை ஏறுவதற்குப் பழமை யான படிகள் உள்ளன. மேற்கேயுள்ள மலைமீது முன்பு நேமிநாத தீர்த் தங்கரர் கோயில் இருந்தது. அதற்குச் சற்றுக் கீழே இயக்கி கூஷ் மாண்டினி கோயில் இருந்தது. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் சந்நியாசி ஒருவர் அங்குள்ள சமணச் சிலைகளை அகற்றிவிட்டு சிவலிங்கப் பிரதிஷ்ட்டை செய்து விட்டார். நேமிநாதர், இயக்கி படிமங்களைப்