பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

ஈரோடு மாவட்ட வரலாறு


தொடர்ந்து பூசி எழுத்துக்களை மறைத்துவிடுகின்றனர். திண்டல் மலைக் கல்வெட்டு ஈரோடு யு ஆர் சி நிறுவனத்தினரால் மீண்டும் பதிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டுக்களைக் காத்தல்

பழமங்கலத்தில் 'இக்கற்பொறி காத்தான் பாதம் என் தலை மேலின' என்று எழுதப்பட்டுள்ளது. விசயமங்கலம் விக்கிரம சோழன் கல்வெட்டில் மண்டபம் புதுப்பிக்கும் போது பழைய கல்வெட்டுக்களைப் படியெடுத்து மீண்டும் வெட்டியதாகக் கூறப்படுகிறது.

"முதற் பிரகாரம் இறக்கித் திருப்பணி செய்யக் கொண்டமையால் மண்டபஞ் செய்து முன்னாள் வைத்த சந்தியா தீபங்கள் பழங்கல் வெட்டின் படி எடுத்து இம் மண்டபத்தில் வெட்டினபடியாவது" என்பது கல்வெட்டு வாசகம்.

பாடல் கல்வெட்டுக்கள்

பெரும்பாலும் கல்வெட்டுக்கள் உரைநடை வடிவத்திலேயே இருக்கும். சில இடங்களில் செய்திகளை பாடல் வடிவில் வெட்டி வைப்பதும் உண்டு. ஈரோடு மாவட்டத்தில் ஆனூர், கூகலூர், பழமங்கலம், பவானி, பிடாரியூர், மடவளாகம். வெள்ளோடு ஆகிய ஊர்களில் பாடல் வடிவில் கல்வெட்டுக்கள் உள்ளன. சர்க்கார் பெரிய பாளையத்திலும், டணாயக்கன் கோட்டையிலும் பிரயியத்திலும் கொங்குச் சோழர் மெய்க்கீர்த்தியும் பாடல் வடிவில் உள்ளன.

ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்களின் சிறப்புக்களுள் சில

1. கல்வெட்டின் தொடக்கத்தில் உள்ள 'ஸ்வஸ்திஸ்ரீ' என்ற மங்கலச் சொல்லோடு அல்லது தனியாக "நன்மங்கலஞ்சிறக்க என்று பொறிந்திருப்பது.

2. ஆட்சியாண்டு "திருவெழுத்திட்டுச் செல்லாநின்ற திருநல்லி யாண்டு" என்று குறிப்பது.