பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

ஈரோடு மாவட்ட வரலாறு


"தக்கை ராமாயணம்" என்ற காப்பியத்தை பங்களாப்புதூர் பேராசிரியர் கு. அருணாசலக்கவுண்டர் பதிப்பித்தார். சங்க கால இசை நூல் “பஞ்சமரபு” அழிந்துவிட்டதாகக் கூறப்பட்டது. காங்கயம் வட்டம் மடவளாகம் சிவாலயத்தில் நடராசர் சன்னதியில் ஏட்டுச்சுவடி கிடைத்து வே.ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர் வெளியிட்டார்.

(இ) நாணயங்கள்

ஈரோடு மாவட்டத்தில் ரோமானியர் காலத்திலிருந்து பல்வேறு அரசமரபினர் வெளியிட்ட பல நாணயங்கள் கிடைத்துள்ளன. கலைமகள் கல்வி நிலைய அருங்காட்சியகத்திலும், பேராசிரியர் கே.ஏ. திரு ஞான சம்பந்தம் அவர்கள் தொகுப்பிலும் பல கொங்கு நாட்டு நாணயங்கள் உள்ளன. அவற்றில் பலவற்றில் எழுத்துப் பொறிப்புக்கள் உள்ளன.