பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

15


வருவாய்க் கிராமங்களையும், 4687 குடியிருப்பு ஊர்களையும் கொண்டு விளங்குகிறது ஈரோடு மாவட்டம்.

இம்மாவட்டத்திலுள்ள நகராட்சிகள் பதினொன்று. அவை, ஈரோடு, தாராபுரம், பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், வெள்ளகோவில், காங்கயம், பெரிய சேமூர், வீரப்பன் சத்திரம், சூரம்பட்டி, காசிபாளையம் ஆகியவையாகும்.

பொதுவாக வெப்பநிலை அதிக அளவு 37.9°செ குறைந்த அளவு 20.0°செ ஆகும். வடக்கே வெயில் குறைவாகவும் தெற்கே செல்லச் செல்ல வெயில் அதிகமாகவும் இருக்கும். ஆண்டுக்கு சராசரி 660மி.மீட்டர் மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை (சூலை - செப்டம்பர்) குறைவாகவும், வடகிழக்குப் பருவமழை (அக்டோபர்-டிசம்பர்) அதிகமாகவும் இருக்கும்.