உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

ஈரோடு மாவட்ட வரலாறு


கண்ணான தம்பிக்கு - என் கண்ணே
காதுருத்தப் போறோமென்று
பொன்னான மாமனுக்கு - என் கண்ணே
போட்டுவிட்டோம் கடுதாசி

அரும்பாலே மாலைகட்டி - என் கண்ணே
அவசரமாய் வந்தாங்க
முன்னூறு வெத்தலையும் - என் கண்ணே
மொதமாமன் சீரு வரும்

நானூறு வெத்தலையும் என் கண்ணே
நடுமாமன் சீரு வரும்
கற்கண்டுத் தட்டுவரும் என் கண்ணே
சுடசிமாமெஞ் சீரு வரும்"

சீன ஆக்கிரமிப்பின் போது குழந்தைகள் பாடிய பாடல்

'ஐ சக்கா சை அரைப்படி நெய்
சீனாக்காரன் தலையிலே தீயப்பத்தி வை"

குழந்தைகளுக்கு கற்றுத் தரும் பக்திப்பாடல்

"குள்ளக் குள்ளனை குண்டு வயிறனை
வெள்ளிக் கொம்பனை விநாயகளைத் தொழு"