பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

55


கிடைத்துள்ளன. இவன் மகள் விக்கிரமசோழன் சோழமாதேவியார் இறந்ததன் நினைவாக வெள்ளகோயில் கோயிலுக்குத் 'தூங்கா விளக்கு' நந்தாவிளக்கு வைத்துள்ளான். இவனது அமைச்சன் 'வடகரைத் திருக்கழுமல வளநாட்டு நந்தியநல்லூருடையான் வீரசங்காதச் சுற்றிய தேவன் வானவன் உத்தரமந்திரியாயின நானா தேசிய நாட்டுச் செட்டி' என்பவன். மற்றொரு உயர் அலுவலன் பெருமாள் பெருந்தனத்து அரையர்களில் நக்கன் விடங்கனான விக்கிரம சோழப் பல்லவரையன்' என்பவன்.

இவன் அமைச்சன் புதுப்பித்த விசயமங்கலம் சமணக்கோயில் 'வீரசங்காதப் பெரும்பள்ளி" எனப்பட்டது. இவன் காலத்தில் திங்களூர் சமணக்கோயிலில் மண்டபம் கட்டி 'சிங்களாந்தகன்" என்று பெயரிடப்பட்டது.

4. இராசகேசரி அபிமானசோழ ராசாதிராசன் (1085-1100)

இவன் கல்வெட்டுக்கள் கண்ணபுரம், பட்டாலி, பிரமியம், கீரனூர், விசயமங்கலம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இவன் காலத்தில் பிரமியம் திருவலஞ்சுழி நாதர் கோயில் முன் மண்டபம் கட்டப்பட்டது.

5. பரகேசரி இராசாதிராச உத்தம சோழன் (1100-1117)

இவன் கல்வெட்டுக்கள் பிரமியம், விசயமங்கலம் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. இவனது படைத்தலைவன் பெயர் 'பெருமாள் சாமந்தரில் உரிமையாரில் கண்டுகள் அபிமான சோழ ராசாதிராசன்" என்பது. ஒரு படைவீரன் பெயர் 'பெருமாள் வாளிலாரில் கேரள கேசரி அமரபுயங்கள் அபிமான சோழ ராசாதிராசன்" என்பது,

5. இராசகேசரி ராசாதிராச வீரசோழன் (1117-1138)

இவன் கல்வெட்டுக்கள் பிரமியம், விசயமங்கலம் ஆகிய இடங்களில் உள்ளன. இவள் காலத்தில் பிரமியம் காமக்காணி சோமாசி என்ற பிராமணன் ராஜத்துரோகி ஆனதால் அவனது பூமியை