பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா (நாற்பது வயது ஒரு வயதா? ) * சங்கடமும் சம்மதமும் 'இருபதில் எல்லாம் நடந்து விட்டது. முப்பதில் எல்லாம் முடிந்து விட்டது. நாற்பதில் நடக்க என்ன இருக்கிறது?" என்று சலித்துக் கொள்பவர்கள்; - புளித்துப் பேசுபவர்கள், இயற்கையைப் பழித்து ஏசுபவர்கள் நம்மிடையே நிறைய பேர்கள் உண்டு. என்ன நடந்துவிட்டது என்று சங்கடப்படு கின்றார்கள் இந்த மக்கள் என்று எதிர்த்துக் கேட்பதற்கு இங்கே யாருமில்லை. சங்கடத்திற்கு சம்மதம் தந்துவிட்டு, சஞ்சலப்படு கின்ற நெஞ்சுடன், சலனத்தில் சங்கமமாகின்ற ஆட்களே அதிகம் உண்டு. ஒரு மரியாதை! என்னதான் நாம் கெட்டிக்காரர்களாக இருந்தாலும், கொட்டிக் குவித்துவைத்திருக்கின்ற பணக்காரர்களாக இருந்தாலும், இயற்கைக்கு நாம் மரியாதை கொடுத்தே ஆக வேண்டும். - இயற்கையின் ஆட்சிக்கு அடிபணிந்தே ஆக வேண்டும். ஆக, மாறுகின்ற காலமும், பருவமும், வயதை உயர்த்திவிட்டு, ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தான் மறைகின்றது.