பக்கம்:உயிரில் கலந்தது.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


  • தம்பி, எனக்கோ வங்சாகிடுச்சு. எனக்கு கமலாட்சிதான் ஊர், உலகம் எல்லாம். என் சொத்து பூராவுக்கும் அவனே வாரிசு. உங்க ஜாதகத்தையும் கமலாட்சி ஜாதகத்தையும் பார்த்ததில், கனகச்சிதமாக பெட்டியும் பேழையுமாப் பொருந்தியிருக்குது. உங்க சம்மதத்தை அறிஞ்சுக்கிட்டுப் போகத்தான் வந்தேன்,” என்றார்.

‘நல்லது,” என்றார் ஞானசீலன்.

கோசலை அம்மாள் காப்பி பலக ாரம் கொண்டு வந்தாள். அவள் திரும்புகாலில், மகனை அழைத்தாள். “இந்தாப்பாரு, தம்பி, இந்தப் போட்டோப் படத்தை’ என்று சொல்லி, ஒரு நிழற்படத்தை நீட்டினுள். முன் பிறப்பின் நிழல் தொடர்ந்து வருவதைப் போன்றதொரு ஞாபகம் ஏற்பட்டது அவருக்கு. படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தார். தொடுத்த நயனங் களை அவரால் எடுக்க முடியவில்லை. அழகு என்றால் அப்படி யொரு விசித்திரமான அழகு. அழகில் கவர்ச்சியும், கவர்ச்சி யில் அழகும் சமபங்காகச் சொட்டின. இதுவரை நூற்றுக் கணக்கான பெண்களின் அழகை வர்ணித்திருக்கிறேன் நான். ஆனல், இதுபோல ஒர் அழகியை நான் ஏன் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அப்படியென்முல், என்னைவிட-என் கற்பணுசக்தியைக் காட்டிலும், அந்தப் படைப்புத் தந்தையின் கலைஞானம் உயர்ந்ததாகிவிட்டதா? அப்படி யென்றால், படைப்புத் தொழிலில் நான் தோற்றுவிட்டேன் என்று அர்த்தமா?...’ உள்ளத்தெழுந்த தாழ்வுணர்ச்சியில் வெடித்த வேத்னே வல்வினையென வடிவெடுத்து, புயலாய்ச் சீறியது.

‘தம்பி, நான் ராத்திரி உங்கிட்டே சொன்ன பேச்சை திணைப்பிலே எழுதி வச்சுக்கப்பா. விடிகாலையிலேருந்து எனக்கு நல்ல சுரணை வரலே. இப்படியே ரொம்ப நாள் நீடிக்கும்னு எனக்குத் தோணலே. என் ஆசையை நீ புரிஞ்சுக்கிட்டே உன் மனசைப் புரிஞ்சுக்கிடத்தான், நாலைஞ்சு பொண்ணுக படங்களையும் பேர்களே யும் உனக்குக் காட்டிகிட்டிருக்கேன். பெரியவருக்கு என்ன பதில் சொல்றது?’ என்று துருவிப் பேசினுள் அன்னை. -