பக்கம்:உயிரில் கலந்தது.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67


களமாகக் கொண்டது அக்கதை. அடுத்தது, மங்கம்மா கதை. அதற்கு, சில சந்தேகங்கள் தெளிவு பெற வேண்டும். மதுரை நாய்க்கர்களின் வரலாறு’ என்னும் சத்யநாதய்யரின் நூலே சரஸ்வதிமகாவில் புரட்டவேண்டும். அப்புறம், திரையுலக நண்பர் ஒருவருக்காக ட்ரீட்மென்ட் ஒன்று தயாரிக்க வேண்டும். அது முடிந்தால், நிலவுப்பதிப்பகத்தார் வெளி யிடவிருக்கும் அவரது நாவல்களின் அச்சுப்படிகளைச் சரி பார்க்கப் பொழுது சரியாகிவிடும். எல்லாம் முடிய பத்து:பதினைந்து நாட்கள் போதுமா?...இதற்கிடையில்தான் நான் என் வாணிக்கும் பதில் சொல்லவேணும். இல்லையா?...ம்!...” வாணியின் பெயர் அவளுடைய எழிலை நினைவூட்டிற்று. அவளது எழில் அவளுக்குரிய பெண்மையின் மென்மையை நினைவூட்டியது; அந்தப் பெண்மையின் மென்மை அவருக் குகந்த கடமையின் நிறைவைச் சுட்டியது. அவளது கடமை யின் நிறைவில் அவளது ஏழைமை, சுடச்சுடரும் பொன்னுக ஒளிர்ந்து பளிச்சிட, அவள் கோதண்டபாணி என்ற கோர்ட் அமீனுவின் மகளாக இருந்த உறவுடன் திருமதி ஞானசீலன் என்னும் புதிய உரிமையையும் ஒட்டிப் பிடித்துக்கொள்ள விருக்கின்ற வாழ்க்கை ஒப்பந்'தத்தின் நிழல் அவரை மடக் கியது. மடங்கிய ஞாபகசக்தியில் வாணி சக்தியாய் நின்றாள்.

“வாணி!...”

இந்தப் பெயர்ப் பஜனையுடன்தான் அவர் எட்டாம் நம்பர் பஸ் பிடித்து, பாம்பாட்டித் தெருவை அடைந்தாரோ?...

பாசமும் பாசமும் ஆரத்தழுவிக் கொண்டன.

‘அம்மா!...” -

கதம்பி!”

“இப்ப உங்க உடம்பு பரவாயில்லீங்க. மெட்டடோன் டானிக் பரவாயில்லைதானே?...’ r -

“ஆமா தம்பி. ஆன, நீதான் கொஞ்சம் இளைச்சிருக்கிருப் பிலே என் கண்ணுக்குத் தோணுது!”